Wednesday, October 21, 2009

பாஸ‌ந்தி



பால் - 2லிட்ட‌ர்
குங்குமப்பூ - பின்ச்
பாதாம் பருப்பு - 15
முந்திரி பருப்பு ‍ 14
சீனி ‍ கால் கப்
செய்முறை:
பாலை நன்றாக சுண்ட காய்ச்சவும்.பாலின் மேல் வரும் ஆடையை ஒரு பவுளில் சேர்த்து வைக்கவும் பால் முக்கால் பாகமாக வத்தி வந்த பிறகு சீனியை போட்டு கிளறி இறக்கவும் எடுத்து வைத்த ஆடையை சேர்த்து குங்குமப் பூ, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பை பொடியாக கட் பண்ணி மேலே தூவவும்.பிறகு பால் ஆறிய பிறகு பிரிட்ஜில் குளிர வைக்கவும்.

க‌த்த‌ரிக்காய் ம‌சாலா


கத்திரிக்காய் 10
வெங்காயம் - 1
தக்காளி - 1
புளி - சிறிது
உப்பு
வறுத்து அரைக்க:
தேங்காய் - 1 டேபிள்ஸ்பூன்
எள்ளு - 1 டீஸ்பூன்
நில‌க்கடலை - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4
தனியா - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - சிறிது
வெந்தயம் - சிறிது
கடுகு ‍ சிறிது
.தாளிக்க :
கடுகு
கருவேப்பிலை
வெங்காயம் - 1
இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்.
கரம் மசாலா ‍ சிறிது
செய்முறை:
கத்தரிக்காயை நான்காக கட் பண்ணவும்.வறுக்க வேண்டியவைகளை மசாலா பொருட்கள்,தேங்காய் துருவல் வறுத்து,அரைக்கும் போது பாதி வெங்காயம் ,தக்காளி யை அதனுடன் மிக்ஸியில் சேர்த்து சுற்றி எடுக்கவும்.சட்டியில் எண்ணை விட்டு அதில் கடுகு கறிவேப்பிலை,வெங்காயம்,இஞ்சி பூண்டு பேஸ்ட் ,கரம் மசாலா போட்டு தாளித்து ,கத்திரிக்காயை போட்டு எண்ணையில் பத்து நிமிடம் பிரட்டி பிரட்டி வேக விடவும்.அரைத்த மசாலா பொருட்களை சிறிது தண்ணீர்,உப்பு சேர்த்து கத்திரிக்காயுடன் சேர்த்து வேக விடவும்.வெந்த பின்பு புளிக்கரைசலை கெட்டியாக விடவும்.பச்ச வாசனை போனபின் ,சிறிது வெல்லம் சேர்த்து சிம்மில் வைத்து எண்ணை தெளிந்து இறக்கவும்

குறிப்பு
பிரியாணி,ச‌ப்பாத்தி,சாதம், நான் ந‌ல்லா இருக்கும்

கேசரி பாத்/ஷீரா


ரவை 1 கப் (வறுத்தது)
சீனி 1 1/2 க‌ப்
ம‌ஞ்ச‌ள் தூள் சிறிது
முந்திரி பருப்பு 6
ஏலக்காய்பொடி 1 டீஸ்பூன்
நெய் ‍ 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
இரண்டு கப் தண்ணீர் ( ஒரு கப் ரவைக்கு 2 கப் தண்ணீர்) விட்டு கொதித்ததும் ரவையை போட்டு கிளறவும்.ரவை நன்கு வெந்த‌தும் ஏல‌க்காய்பொடி ம‌ஞ்ச‌ள்தூள் போட்டு அடுப்பிலிருந்து இறக்கி சீனியை போட்டு ந‌ன்கு கிள‌ற‌வும் க‌ட்டி ப‌டாமல் வரும் க‌டைசியில் நெய்யில் முந்திரியை வ‌றுத்து போட‌வும்

ப்ரெட் டோஸ்ட்


ப்ரெட் ஸ்லைஸ்- 4
முட்டை - 4
இஞ்சிபூண்டு பேஸ்ட் - சிறிது
பச்சை மிளகாய் ‍ 1
வெங்காயம் - பாதி
உப்பு
பெப்பர் பொடி சிறிது
சீரகப் பொடி சிறிது (விருப்பபட்டால்)
செய்முறை:
ப்ரெட்டை தவிர மற்ற பொருட்களை மிக்ஸியில் அரைத்து எடுக்கவும் அரைத்த முட்டையுடன் ப்ரெட்டை இருபுறமும் டிப் பண்ணிதோசை கல்லில் சிறிது எண்ணை ஊற்றி திருப்பி போட்டு எடுக்கவும் டோஸ்ட் மேலே ஜாமை ஊற்றி குழ‌ந்தைக‌ளுக்கு கொடுக்க‌லாம்

ஓமப் பொடி



கடலை மாவு - 1 க‌ப்
அரிசி மாவு - கால் க‌ப்
ஓமம் - அரை டீஸ்பூன்
சில்லி ப‌வுட‌ர் ஒரு டீஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்
நெய் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை
ஓமத்தை நைசாக அரைக்கவும்.அரைத்த விழுது, உப்பு, நெய், கடலை மாவு, அரிசி மாவு,சில்லி பவுடர் எல்லாம் சேர்த்து கெட்டியாக பிசைந்து ஓம்ப்பொடி அச்சில் இட்டு, வாணலியில் எண்ணெய் காய விட்டு, நேரடியாக எண்ணெயில் பிழியவும்.ஒருமுறை திருப்பி விட்டு உடனே எடுக்கவும். (அடுப்பை மிதமாக வைக்க வேண்டும்)

Tuesday, October 20, 2009

போளி


தேவையானவை:
மைதா- இரண்டு க‌ப்
கடலைப்பருப்பு 1 க‌ப்
வெல்லம் ஒரு கப்
தேங்காய்துறுவல் அரைகப்
ஏலப்பொடி சிறிது
மஞ்சத்தூள் சிறிது
உப்பு 1 பின்ச்
நெய்
செய்முறை:
மைதாவில் உப்பு, மஞ்சள் போட்டு இரண்டு டீஸ்பூன் எண்ணெயைச் சேர்த்து கலக்கவும். பின்பு தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து சற்று தளர பிசைந்துக் கொள்ளவும்.கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து வேகவைத்து நீரை வடித்து விட்டு ஒன்றும்பாதியுமாக அரைத்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப்போட்டு உருக்கவும். அதில் அரைத்த கடலைபருப்பு, ஏலப்பொடி, மற்றும் தேங்காய் துறுவல் சேர்த்து நன்கு கலக்கவும்.பூரணம் நன்கு கெட்டியானவுடன் இறக்கி வைத்து ஆறவைக்கவும்.பிறகு மைதாமாவிலிருந்து சிறிய எலுமிச்சையளவு உருண்டையை எடுத்து தேய்க்கவும்.பிறகு பூரணத்தை சிறிது எடுத்து அதன் நடுவில் வைத்து மூடி மீண்டும் தேய்க்கவும். பிறகு தோசைகல்லை காயவைத்து தயாரித்த போளிகளை ஒவ்வொன்றாக போட்டு சுற்றிலும் நெய்யை ஊற்றி இரண்டு பக்கமும் சிவக்க வேகவைத்து எடுக்கவும்

பாதாம் பர்ஃபி



பாதாம் ஒரு கப்
பால் அரை கப்
நெய் 1/4 கப்
சீனி 1 கப்
குங்குமப்பூ ஒரு பின்ச்
செய்முறை:
வெந்நீரில் பாதாம் பருப்புகளை போட்டு ஊற வைக்கவும். நன்கு ஊறியதும் தோல் உரித்து கொள்ளவும். .பருப்பை மிக்ஸியில் போட்டு பால் சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
ஒரு அடிகணமான‌ பாத்திரத்தில் சீனியை போட்டு சிறிது தண்ணீர் விட்டு ஒரு கம்பி பதம் வந்ததும் அரைத்த விழுதை ஊற்றி கைவிடாமல் கிளறவும் பாதாம் கலவை சற்று கெட்டியான பதம் வந்ததும் குங்குமபூவை சிறிது பாலில் கலந்து கலக்கவும், நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கிளறி விடவும். நெய் எல்லாவற்றையும் ஓரே நேரத்தில் சேர்த்து விட கூடாது பாதாம் கலவை நன்கு கெட்டியாகி பர்ஃபி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு கீழே இறக்கி வைக்கவும். சிறிது ஆறியதும் கட் பண்ணவும்

ரவா கிச்சடி


ரவை - 1 கப்
பட்டாணி - சிறிது
கேரட் 1
பீன்ஸ் 4
தக்காளி ‍ 1
வெங்காயம் 1
ம‌ல்லி இலை
மஞ்சள் பொடி சிறிது
உப்பு சிறிது
இஞ்சி, பூண்டுவிழுது 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - நான்கு
தாளிக்க
கடுகு ,
உ பருப்பு
கடலை பருப்பு
கறிவேப்பில்லை
செய்முறை:
பட்டாணி, பீன்ஸ், கேரட் கட் பண்ணி வேகவைக்க‌
ரவையை சட்டியில் 3 நிமிடம் வறுத்து கொள்ள வேண்டும்.சட்டியில் எண்ணெய் விட்டு கடுகு , கடலை பருப்பு, உளுந்தம்பருப்பு போட்டு தாளித்து நறு‌க்‌கிய வெங்காயம்,பச்ச மிளகாய் வதங்கியதும் இஞ்சிபுண்டு விழுது,த‌க்கா‌ளி போட்டு வதக்கவும்.மஞ்சள் பொடி,வேக வைத்த காய்களை சேர்த்து வதக்கவும்2கப் தண்‌ணீர் சேர்த்து தேவையான அளவு உ‌ப்பு போ‌ட்டு கொதி‌க்க ‌விடவு‌ம்த‌ண்‌ணீ‌ர் ந‌ன்கு கொ‌தி‌த்தது‌ம், ரவையை போடவும். நன்கு கிளறி பிறகு வெந்தவுடன் இறக்கவும்
சுவையான ரவா கிச்சடி தயார்.
தேங்காய் சட்னியுடன் சாப்பிடவும்

பாவ் பாஜி


செய்முறை:
உருளைக்கிழங்கு 2
கேரட் 2
பீன்ஸ் 1 க‌ப்
பட்டாணி சிறிது
காலிஃளவர் சிறிது
குட‌மிள‌காய் பாதி
வெங்காயம் ஒன்று
தக்காளி இரண்டு
பச்சைமிளகாய் நான்கு
இஞ்சி பூண்டு 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்
தனியாத்தூள் 1 டீஸ்பூன்
மஞ்சத்தூள் அரை டீஸ்பூன்
சீரகத்தூள் அரை டீஸ்பூன்
பாவ் பாஜி ம‌சாலா 1 டீஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் ஒரு டீஸ்பூன்
வெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
உப்பு
பன் - நான்கு
செய்முறை:
உருளைகிழங்கின் தோலை சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.பிறகு அதனுடன் காலிஃளவரை தவிர்த்து மற்ற எல்லாக் காய்களையும் சேர்த்து கொதிக்கும் நீரில் போட்டு நன்கு வேகவைத்து நீரைவடித்து விட்டு ஒன்ரும் பாதியுமாக மசித்து வைக்கவும்.வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.ஒரு வாயகன்ற சட்டியில் வெண்ணெய், எண்ணெயை கலந்து ஊற்றி காயவைத்து வெங்காயம், பச்சைமிளகாயைப் போட்டு நன்கு வதக்கவும்.பிறகு இஞ்சி பூண்டைப் போட்டு வதக்கி தக்காளியை சேர்த்து நன்கு மைய்ய வதக்கவும்.பிறகு காலிஃளவரைப்போட்டு நன்கு வதக்கி அது வெந்தவுடன் எல்லாத்தூளையும் போட்டு உப்பைச் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.பிறகு மசித்த காய்களைப் போட்டு நன்கு கிளறி கால்க் கோப்பை நீரை ஊற்றி அனலைக் குறைத்து வைத்து வேகவிடவும்.மசாலா நன்கு கலந்து கெட்டியாக ஆனதும், எலுமிச்சை தெளித்து கொத்தமல்லியை தூவி கிளறி விட்டு இறக்கி விடவும்.பிறகு பாவ்/பன்னை இரண்டாக நறுக்கி சூடான தோசைகல்லில் பொட்டு சூடாக்கி வெண்ணெயைத் தடவி தயாரித்த மசாலாவை அதன் நடுவில் வைத்து,ஆனியனை கட் பண்ணி போட்டு சூடாக பரிமாறவும்.

Friday, October 16, 2009

ஆமவடை


செய்முறை :

கடலைப்பருப்பு இரண்டு க‌ப்
ஆனியன் ‍ இரண்டு
மிளகாய் வத்தல் ஐந்து
இஞ்சி சிறிது
சோம்பு சிறிது
கறிவேப்பிலை

மல்லி
உப்பு

செய்முறை
கடலைப்பருப்பை குறைந்தது இரண்டு மணிநேரம் அல்லது இரவு முழுவதும் ஊறவைத்து ஒரு கைப்பிடியளவு தனியாக எடுத்து வைத்து விடவும்.வெங்காயம் மல்லி பொடியாக நறுக்கி வைக்கவும்.பிறகு பருப்பு ஊறிய தண்ணீரை வடித்து விட்டு, அதனுடன் காய்ந்தமிளகாய், உப்பு,இஞ்சி,ஒரு தேக்கரண்டி சோம்பு,ஆகியவற்றைச் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துககொள்ளவும்.அரைத்தபருப்புடன்,வெங்காயம்,மல்லி,கறிவேப்பிலை, மீதமுள்ள சோம்பு, தனியாக எடுத்து வைத்துள்ள பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.பிறகு எண்ணெய் சட்டியில் எண்ணெயைக் காய வைத்து அனலை குறைத்து வைத்து, பருப்பு கலவையிலிருந்து ஒரு எலுமிச்சையளவு உருண்டையை உள்ளங்கையில் வைத்து தட்டி எண்ணெயில் போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.இதனுடன் தேங்காய் சட்னியை வைத்து சூடாக பரிமாறவும்.

Thursday, October 15, 2009

கட்லெட்


பீட்ருட் 1
உருளை கிழங்கு 1
கேரட் 2
பட்டாணி சிறிது
பீன்ஸ் சிறிது


செய்முறை:
வெங்காயம் ‍ இரன்டு
பச்ச மிளகாய் - இரன்டு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சிபூண்டுபேஸ்ட் - இரண்டுடீஸ்பூன்
உப்பு
ம‌ல்லி இலை
புதினா ‍

சோளமாவு
மைதா மாவு
பிரட் கிரெம்ஸ் பவுடர்

செய்முறை:

காய்கள் அனைத்தையும் சிறியதாக கட் பண்ணி வேகவைத்து தண்ணீரில்லாமல் வைக்கவும் சட்டியில் ஆயில் விட்டு அதில் வெங்காயம், பச்ச மிளகாய் போட்டு வதக்கவும் இஞ்சி பூண்டு பேஸ்ட், மல்லி புதினா,கரம்மசாலா தூள்,உப்பு போட்டு காய்களையும் சேர்த்து வதக்கி ஆறவைக்கவும்.ஆறவைத்த இந்த கலவை,சிறிது எடுத்து உருண்டைகளாக உருட்டி கொள்க‌ மைதா,சோளமாவுகளை கரைத்து கொள்ளவும் உருண்டைகளை இந்த மாவு கலவையில் பிரட்டி பிரட்கிரெம்ஸில் நன்கு பிரட்டி பொறித்து எடுக்கவும்


இதற்கு மல்லிசட்னி,தக்காளி கெட்சப் நல்லா இருக்கும்

பகோடா


கடலை மாவு 1 கப்
பச்சரிசிமாவு 1/2 கப்
வெங்காயம் 4 ‍‍
பச்ச மிளகாய் 4
பெருங்காயம் 1 டீஸ்பூன்
சோம்பு ஒரு பின்ச்
உப்பு
பேகிங் ப‌வுட‌ர் 1/4 டீஸ்பூன்
பூண்டு நான்கு
இஞ்சி 1 இஞ்ச்
எண்ணைய்
செய்முறை :
கடலை மாவு ,அரிசி மாவு ,பேகிங் பவுடர் , சோம்பு, உப்பு, பெருங்காயம் , வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் என அனைத்தையும் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.வாணலியில் காய வைத்த எண்ணையை கொஞ்சம் ஊற்றிமீண்டும் பிசையவும்.அதை எண்ணையில் பொறித்து எடுக்கவும்

Friday, October 2, 2009

துர்கா ஸ்லோகம்

துர்கா துர்காதி சமனீ துர்காபத்விநிவாரிணீ
துர்கமச்சேதினீ துர்கஸாதினீ துர்கநாசி(ஹ்)னீ
துர்கதோத்தாரிணீ துர்க நிஹந்த்ரீ துர்கமாபஹா
துர்கமக்ஞானதா துர்கதை த்யலோக தவானலா
துர்கமா துர்கமாலோகா துர்கமாத்மஸ்வரூபிணீ
துர்கமார்க ப்ரதா துர்கமவித்யா துர்கமாச்ரிதா
துர்கமக்ஞான ஸம்ஸ்தானா துர்கமத்யான பாஸினீ
துர்கமோஹா துர்கமகா துர்கமார்த ஸ்வரூபிணீ
துர்கமாஸுர ஸம்ஹந்த்ரீ துர்கமாயுத தாரிணீ
துர்கமாங்கீ(3) துர்கமதா துர்கமேச்வரீ
துர்கபீமா துர்கபாமா துர்கபா துர்கதாரிணீ
நாமவலிமிமாம் யஸ்து துர்காயா மம மானவ:
படேத் ஸர்வபயான்முக்தோ பவிஷ்யதி ந ஸம்சய: