அரிசி - 3 கப்
கடலைப்பருப்பு - ஒரு கப்
பயத்தம்பருப்பு - கால் கப்,
எள் சிறிது
சீரகம் சிறிது
வெண்ணெய் - சிறிது
உப்பு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
அரிசி, கடலைப்பருப்பு, பயத்தம்பருப்பு மூன்றையும் மிஷினில் மாவாக அரைத்துக் சலித்து கொள்ளவும். இந்த மாவுடன் உப்பு, பெருங்காயத்தை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும். பிறகு, வெண்ணெய், எள், சீரகம் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்துக்குப் பிசையவும். சூடான எண்ணெயை சிறிது அதில் ஊற்றவும்முறுக்கு மிஷினில் ஒரு ரவுண்ட் உள்ள அச்சை வைத்து, அதில் மாவைப் போட்டு தட்டில் பிழிந்து காய்ந்த எண்ணெயில் போடவும். பொன்னிறமானதும் எடுக்கவும்