Tuesday, January 26, 2010
எள்ளு உருண்டை
வெள்ளை எள் 1 கப்
வெல்லம் 1/2 கப்
ஏலம் 1/2 டீஸ்பூன்
நெய் 3 ஸ்பூன்
செய்முறை:
எள்ளை சிறிது நேரம் ஊற வைத்து நன்கு தண்ணீர் வடிய விட்டு வெறும் சட்டியில் நன்கு வறுத்து கொள்க. வெல்லம் கரைந்ததும் வடிகட்டி நல்லா கெட்டிபாகாகும் வரை காய்ச்சவும். பாகை சிறிது சிறிதாக எள்ளில் ஊற்றி, ஏலம் சேர்த்து கையில் நெய்யை தடவி உருண்டைகளாக உருட்டவும்.
குறிப்பு:
கெட்டி பாகு என்பது ஒரு கப்பு தண்ணீரில் சிறிது பாகை விட்டால் அது உருண்டைகளாக உருட்டவரும்.
Friday, January 15, 2010
கத்தரிக்காய் சாதம்
கத்தரிக்காய் 4
சாதம் 1 கப்
தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
புளி தண்ணீர் 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள்
தாளிக்க:
கடுகு
கடலை பருப்பு
உளுந்தம் பருப்பு
கறிவேப்பிள்ளை
பவுடர் பண்ண:
சில்லி 5
கடலை பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
தனியா 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் 2 வறுத்து பவுடர் பண்ணவும்.
செய்முறை:
சட்டியில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியதை போட்டு தாளித்து கத்தரிக்காயை நீளமாக கட் பண்ணி போட்டு நல்லா வதக்கவும் அதனுடன் தேங்காயை சேர்த்து நன்கு வதக்கவும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் சிறிது ஊற்றி மூடி வைத்து காயை வேக விடவும் எல்லாம் சேர்ந்து கட்டியாக வந்ததும் அதில் புளி தண்ணீரை சேர்த்து கொதிக்க விட்டு வறுத்து பவுடர் பண்ணிய பொடி, உப்பு சேர்த்து நன்கு வதக்கி பச்ச வாடை போனதும் அதில் சாதத்தை கலந்து இறக்கவும் மல்லி இலை தூவவும்
குறிப்பு:
வேண்டுமென்றால் ஆனியன் போட்டு வதக்கலாம்
ஆனியன் ரைத்தா வுடன் நல்லா இருக்கும்
சாதம் 1 கப்
தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
புளி தண்ணீர் 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள்
தாளிக்க:
கடுகு
கடலை பருப்பு
உளுந்தம் பருப்பு
கறிவேப்பிள்ளை
பவுடர் பண்ண:
சில்லி 5
கடலை பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
தனியா 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் 2 வறுத்து பவுடர் பண்ணவும்.
செய்முறை:
சட்டியில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியதை போட்டு தாளித்து கத்தரிக்காயை நீளமாக கட் பண்ணி போட்டு நல்லா வதக்கவும் அதனுடன் தேங்காயை சேர்த்து நன்கு வதக்கவும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் சிறிது ஊற்றி மூடி வைத்து காயை வேக விடவும் எல்லாம் சேர்ந்து கட்டியாக வந்ததும் அதில் புளி தண்ணீரை சேர்த்து கொதிக்க விட்டு வறுத்து பவுடர் பண்ணிய பொடி, உப்பு சேர்த்து நன்கு வதக்கி பச்ச வாடை போனதும் அதில் சாதத்தை கலந்து இறக்கவும் மல்லி இலை தூவவும்
குறிப்பு:
வேண்டுமென்றால் ஆனியன் போட்டு வதக்கலாம்
ஆனியன் ரைத்தா வுடன் நல்லா இருக்கும்
Monday, January 4, 2010
சன்னா மசாலா
தேவையானவை:
சன்னா 1 கப்
ஆனியன் 2
தக்காளி 2
இஞ்சிபூடு பேஸ்டு 1 டேபிள்ஸ்பூன்
புளி பேஸ்ட் 1 டீஸ்பூன்
நெய் 1/2 டேபிள்ஸ்பூன்
சில்லி பவுடர் 2 டீஸ்பூன்
ஏலக்காய் 3
பட்டை 2
கிராம்பு 3
பச்ச மிளகாய்
சுகர் 1 டீஸ்பூன்
செய்முறை:
சன்னாவை ஓவர் நைட் ஊறவிட்டு குக்கரில் 2 விசில் வைத்து வேக விடவும்பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி பூடு பேஸ்ட், ஆனியன் சேர்த்து நன்கு அரைக்கவும்.தக்காளியை வெந்நீரில் போட்டு தோலெடுத்து ஆறிய பின் அரைத்து கொள்ளவும்
சட்டியில் நெய், எண்ணெய் ஊற்றி அதில் சீரகம் போட்டு அரைத்த விழுது,சுகர் உப்பு,மஞ்சள் தூள் போட்டு நன்கு வதக்கவும் எண்ணெய் பிரியும் வரை. அதில் அரைத்த தக்காளியை போட்டு வதக்கவும். சில்லி பவுடர்,புளி பேஸ்ட் போட்டு நன்கு வதக்கி சன்னாவையும் போட்டு சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிட்டு கட்டியானதும் இறக்கவும் மல்லி இலை தூவவிம்
இது பூரி,பட்டூராவிற்க்கு நல்லா இருக்கும்
பட்டூரா
தேவையான பொருட்கள்:
மைதா 2 கப்
ரவை 4 டீஸ்பூன்
சோடா உப்பு 1/2 டீஸ்பூன்
(அல்லது)
சோடா 2 டேபிள்ஸ்பூன்
சுகர் 1டீஸ்பூன்
உப்பு 1/2 டீஸ்பூன்
தயிர் 4டேபிள்ஸ்பூன்
தண்ணீர் 1/2 கப்
எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் பொறிக்க
செய்முறை:
மைதா மாவில் உப்பு, சுகர்,ரவை,தயிர்,சோடா உப்பு, இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் தண்ணீரையும் விட்டு நன்கு* பிசையவும்
பிசைந்த மாவை 3 மணி நேரம் ஊற விடவும்
மீண்டும் ஒரு முறை நன்கு பிசைந்து சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும் உருட்டிய உருண்டைகளை பூரிகளாக தேய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இந்த பட்டூராவை சன்னா மசாலாவுடன் சாப்பிட அருமையாக இருக்கும்
இருந்தது:)
Subscribe to:
Posts (Atom)