Thursday, February 25, 2010

Maida Halwa / மைதா ஹல்வா

This is my 100 th Post,


Maida 1 cup


Sugar 1 3/4 cup

Ghee ¾ cup

Cashew

Cardamom

Saffron

Method:

Shift the Maida in a big bowl and add little water make a dosa batter. Keep the bowl aside. Then take a small non stick kadai and pour the sugar and little water.(don’t add too much water) Allow the sugar to boil until you reach one string consistency, then pour the Maida batter and stir for a while. Add saffron to it. The flour would start to begin to harden and then add ghee .Halwa starts to leave the side of the pan and it will become like a ball around to your ladle. and add, cardamom powder and nuts mix well . Transfer to the bowl

I would like to share these awards with all my blogger friends. Please do accept and post the awards in your blogs.


Thank you for supporting me.





இது என்னுடைய 100 வது பதிவு


தேவையானவை

மைதா 1 கப்

சுக‌ர் 1 3/4 க‌ப்

நெய் 3/4 க‌ப்

ஏல‌ம்

குங்கும‌ பூ

முந்திரி ப‌ருப்பு (வ‌றுத்த‌து)

செய்முறை:

மைதாவை ச‌லித்து சிறிது த‌ண்ணீர் சேர்த்து தோசை மாவு ப‌த‌த்தில் க‌ரைத்து கொள்ள‌வும். ஒரு நான் ஸ்டிக் கடாயில் சுக‌ர் சிறிது வாட்ட‌ர் விட்டு ஒரு க‌ம்பி ப‌த‌ம் பாகு காய்ச்ச‌வும். அதில் க‌ரைத்த‌ மைதா ஊற்றி க‌ட்டி விழாம‌ல் கிளறி கொண்டே இருக்க‌வும் க‌ட்டியான‌தும் அதில் நெய்யை ஊற்றி விடாம‌ல் கிளறவும். ஹ‌ல்வா ஒட்டாம‌ல் வ‌ந்த‌தும் நெய் பிரிய‌ ஆர‌ம்பிக்கும். அதில் ஏல‌ம் முந்திரி போட்டு கிள‌றி இற‌க்க‌வும்.


இது வரைக்கும் எனக்கு ஆதரவு கொடுத்த கொடுத்து கொண்டிருக்கிற அனைவருக்கும் நன்றி!!






இதை என் பிளாக்கர் ப்ரண்ட்ஸ்க்கு ஷேர் பண்ணிக்க விரும்புகிறேன் எல்லோரும் வந்து வாங்கிகோங்க!


எனக்கு ப்ரியா கொடுத்த அவார்டு http://recipes-priya.blogspot.com/




Thanks you so much Priya



இது நிது பாலா கொடுத்தது http://nithubala-recipes.blogspot.com/
Thank you so much Nithu Bala

Tuesday, February 23, 2010

குழி பணியாரம்


புழுங்கல் அரிசி 1 கப்

பச்சரிசி 1 கப்


உளுந்து 100 கிராம்

வெந்த‌ய‌ம் 1 டீஸ்பூன்

பச்சைமிளகாய் 4

கறிவேப்பிலை சிறிது

தேங்காய் துறுவ‌ல் 1/4 க‌ப்

மிள‌கு 1 டீஸ்பூன்

சீர‌க‌ம் 1 டீஸ்பூன்

உப்பு

செய்முறை

அரிசியையும், உளுந்து, வெந்தயம் முதல் நாளே ஊறவைத்து அரைத்து மறுநாள் வ‌ரை புளிக்க‌ வைத்து கொள்ள‌வும்.
ப‌ச்ச‌ மிள‌காய் க‌ட் ப‌ண்ணி மாவில் போட‌வும். மிள‌கு, சீர‌க‌த்தை நெரு நெருன்னு ப‌வுட‌ர் ப‌ண்ணி மாவில் போட‌வும் தேங்காய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.பணியாரக் கல்லை காயவைத்து எண்ணெய் ஊற்றி மாவை ஊற்றி வெந்தவுடன் எடுத்து பரிமாறவும் .


தேங்காய் ச‌ட்னி,த‌க்காளி ச‌ட்னி இத‌ற்கு ந‌ல்லா இருக்கும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
KUZHI PANIYAARAM

Raw Rice 1cups

Bar boild Rice 1 cup

Methi seed 1 teaspoon

Urud Dal 100

coconut 1/4 cup

pepper 1 teaspoon

cummin seed 1 teaspoon

Green chillies 4

Curry leaves

Salt to taste.

Cooking Procedure:

1. Soak rice and urud dal, and methi seed for 5-6 hours.

2. Grind all until you get a paste.

3. Mix batter with salt and allow it to ferment over night.

4. Add coconut, Pepper, cummin seed and cut green chilli. Mix all together.

5. Heat oil in a pan.

6. Pour this batter into the paniyarakkal. Turn when the sides turn golden brown. Serve it hot.


This goes well with Coconut or Tomato Chutney

Monday, February 15, 2010

அவகாடோ சல்சா/டிப்



அவகாடோ 1


லைம் ஜூஸ் 1டீஸ்பூன்

ஆனிய‌ன் 1/2

த‌க்காளி 1/2

ம‌ல்லி

ப‌ச்ச‌ மிள‌காய் 2

உப்பு

சாட் ம‌சாலா 1/2 டீஸ்பூன்

பெப்ப‌ர் ப‌வுட‌ர் 1 டீஸ்பூன்

செய்முறை:

அவ‌காடோவை ஸ்கின்,சீட் எடுத்து ஸ்பூனால் நல்லா ம‌சித்து லைம் ஜூஸை சேர்த்து வைக்க‌வும்.ம‌ற்ற‌ அனைத்து பொருட்க‌ளையும் பொடியாக‌ க‌ட் ப‌ண்ணி வைக்க‌வும்.
அவ‌காடோ க‌ட் ப‌ண்ணிய‌ எல்லாவ‌ற்றையும் சேர்த்து அதில் உப்பு,சாட் ம‌சாலா,பெப்ப‌ர் ப‌வுட‌ர் மிக்ஸ் பண்ணி சாப்பிட‌வும்

இது க்ராக்க‌ர்ஸ்,(Crackers), டோர்டில்லா சிப்ஸ்(Tortilla), பிரட்டில் தடவி சாப்பிட ந‌ல்லா இருக்கும்

லைம் ஜூஸை அவ‌காடோவை க‌ட் ப‌ண்ணிய‌து உட‌னே சேர்க்க‌வும் சீகிர‌ம் க‌ருப்பாகி விடும் நான் சேர்க்க‌ லேட்டான‌தால் க‌ருப்பாகி விட்ட‌து

அவ‌காடோவில் ந‌ல்ல‌ பேட்(Fat) அதிகமா இருக்கு இது ரெம்ப‌ ந‌ல்ல‌து .ஆனால் ந‌ல்லா வெயிட் போடும்

Thursday, February 4, 2010

மின்ட் ரைஸ்



தேவையானவை:


பாஸ்மதி ரைஸ் (வேகவைத்தது) 1 கப்


வறுத்து பவுடர் பண்ண:

கடலைபருப்பு 1டேபிள்ஸ்பூன்

உளுந்தம்பருப்பு 1டேபிள்ஸ்பூன்

அரைக்க:

புதினா 1 கப்

பச்ச மிளகாய் 4

இஞ்சி 1

பூடு 1

தாளிக்க:

கடுகு

கடலை பருப்பு

உளுந்தம் பருப்பு

மிளகாய் வத்தல்

ஆனியன்

செய்முறை:

சட்டியில் தாளித்து ஆனியன் போட்டு நன்கு வதக்கி அரைத்த புதினாவை போட்டு பச்ச வாசனை போகும் வரை வதக்கவும். அதில் கரகரப்பாக பவுடர் பண்ணியதை போட்டு நன்கு கிளறி சிறிது உப்பு போட்டு வேகவைத்த சாதத்தை போட்டு நன்கு கிளறவும் ஈஸியான மின்ட் ரைஸ் ரெடி

குறிப்பு :

வேணுமென்றால் பச்ச பட்டாணி வேக வைத்து சேர்க்கலாம்.
ஆனியன் ரைத்தாவுடன் நல்லா இருக்கும்


Monday, February 1, 2010

உருண்டை குழம்பு



வெங்காயம் – 1

தக்காளி – 1

சாம்பார் பொடி - 1 1/2 டீஸ்பூன்

உருண்டை தயாரிக்க:‍‍

கடலை பருப்பு - 1 கப்

சோம்பு – 1 டீஸ்பூன்

உப்பு

வெங்காயம் – 2

மிளகாய் வத்தல் -4

அரைக்க‌:

க‌ச‌க‌சா -1/2 டீஸ்பூன்

தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:


கடலை பருப்பினை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
கடலை பருப்பு, சோம்பு, வத்தல் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். அதனுடன் நறுக்கிய‌ 1 வெங்காயம், உப்புடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.அதனை இட்லி தட்டில் சிறிய உருண்டைகளாக உருட்டி ஸ்டீம் பண்ணவும் 10 – 15 நிமிடம் வேகவிடவும்.ச‌ட்டியில் க‌டுகு தாளித்து 1 ஆனிய‌ன் க‌ட் ப‌ண்ணி போட்டு வ‌த‌க்க‌வும் தக்காளியை போட்டு நன்கு குழைய வேக விடவும் அதில் சாம்பார் பொடி உப்பு போட்டு வதக்கி சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும் வேகவைத்துள்ள உருண்டைகளை போட்டு மேலும் 5 நிமிடம் கொதிக்க‌விடவும்.க‌டைசியில் அரைத்து வைத்துள்ள‌ க‌ல‌வையை சேர்த்து மேலும் 5 நிமிட‌ம் கொதிக்க‌ விட்டு இற‌க்க‌வும் ம‌ல்லி இலை தூவ‌வும்.
சுவையான உருண்டை குழம்பு ரெடி.

புளியில்லாத உருண்டை குழம்பு புளி அதிகம் சேர்க்க கூடாது அது ஹீமோகுளோபினை கம்மியாக்கும்