Monday, February 1, 2010
உருண்டை குழம்பு
வெங்காயம் – 1
தக்காளி – 1
சாம்பார் பொடி - 1 1/2 டீஸ்பூன்
உருண்டை தயாரிக்க:
கடலை பருப்பு - 1 கப்
சோம்பு – 1 டீஸ்பூன்
உப்பு
வெங்காயம் – 2
மிளகாய் வத்தல் -4
அரைக்க:
கசகசா -1/2 டீஸ்பூன்
தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
கடலை பருப்பினை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
கடலை பருப்பு, சோம்பு, வத்தல் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். அதனுடன் நறுக்கிய 1 வெங்காயம், உப்புடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.அதனை இட்லி தட்டில் சிறிய உருண்டைகளாக உருட்டி ஸ்டீம் பண்ணவும் 10 – 15 நிமிடம் வேகவிடவும்.சட்டியில் கடுகு தாளித்து 1 ஆனியன் கட் பண்ணி போட்டு வதக்கவும் தக்காளியை போட்டு நன்கு குழைய வேக விடவும் அதில் சாம்பார் பொடி உப்பு போட்டு வதக்கி சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும் வேகவைத்துள்ள உருண்டைகளை போட்டு மேலும் 5 நிமிடம் கொதிக்கவிடவும்.கடைசியில் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும் மல்லி இலை தூவவும்.
சுவையான உருண்டை குழம்பு ரெடி.
புளியில்லாத உருண்டை குழம்பு புளி அதிகம் சேர்க்க கூடாது அது ஹீமோகுளோபினை கம்மியாக்கும்
Subscribe to:
Post Comments (Atom)
எனக்கு மிகவும் பிடித்த பருப்பு உருண்டைக்குழம்பு.தேங்காயில் கசகசாவையும் சேர்த்து அரைத்து சேர்க்க சொல்லி இருக்கிறீர்கள்.சுவையாகத்தான் இருக்கும்.படத்தைப்பார்த்ததும் இப்பவே செய்து விடவேண்டும் போல் உள்ளது
ReplyDeleteThis is my fav:)... Paarka rombha nalla irukku :)
ReplyDeleteபார்க்கும்பொழுதே சாப்பிடனும் போல் இருக்கே
ReplyDeleteபுளி பற்றிய தகவலுக்கும், உருண்டை குழம்பு ரெசிபி உக்கும் நன்றி.
ReplyDeleteWow, a recipe blog in Tamil. First time here. Parupurandai Kulambu looks tasty. Drop @ my blog http://sashirecipes.com sometime.
ReplyDeleteParuppu urundai kulambu looks delicious. Perfect with hot rice. Nice prsentation :)
ReplyDeleteNice one :)
ReplyDeleteஅசத்தலா இருக்கு
ReplyDeletelooks perfect!
ReplyDeleteபருப்பு உருண்டை குழம்பு டெக்கரேஷனுடம் சூப்பர்,
ReplyDeleteபள்ளி காலங்களில் என் தோழி வள்ளி அடிக்கடி கொண்டு வருவாள், ரொம்ப நல்ல இருக்கும்
Well presented Susri. ;)
ReplyDeleteசமையல் மாத்திரமின்றி அதை பரிமாறும் அலங்காரமும் (படம்) அற்புதமாக இருக்கின்றன.
ReplyDeleteunda kozhambu looks delicious and azhagaaa present panni irukeenga :)
ReplyDeleteஎங்கம்மா இந்த குழம்பினை புளி சேர்த்தும்,சேர்க்காமலும் செய்வாங்க.ஆனா எனக்கு புளியில்லாமல் குருமா போல் செய்வதுதான் பிடிக்கும்.டெகரேஷனும்,குழம்பும் அருமையா இருக்கு....
ReplyDeleteSusri, சூப்பர் டிஸ்.. இன்றுதான் இப்பக்கம் வந்தேன், கறியைப் பார்த்ததும் நா ஊறிவிட்டது, மட்டின் குருமாபோல இருக்கு.. பதில் அனுப்பாமல் இருக்க முடியவில்லை.
ReplyDeleteபுளியில்லாத உருண்டை குழம்பு புளி அதிகம் சேர்க்க கூடாது அது ஹீமோகுளோபினை கம்மியாக்கும் /// உண்மையாகவோ? அருமையான தகவல், எனக்கு ஹீமோகுளோபின் குறைவாகத்தான் இருக்கிறது, நான் ஒரு பழப்புளிப் பிரியை, கண்டால், உடனே ஒரு உருண்டை வாயில் போடாமல் விடமாட்டேன்... இப்பத்தான் விஷயம் புரியுது. மிக்க நன்றி.
amma pasikkuthu....
ReplyDeleteம்ம்...நல்லா இருக்கே, உருண்டை குழம்பு!
ReplyDeleteபொறுமையா டெகரேட் பண்ணிருக்கிங்க எஸ்.எஸ்.... மேல வைங்கோ! :)
உருண்டை குழம்பு சூப்பர். அலங்காரம் வெகு ஜோர் .
ReplyDeleteYummilious kuzhambu:)
ReplyDeleteஆகா இது எனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல செய்முறை. நன்றி. சரி சரி அந்த பிளேட்டை பார்சல் அனுப்புங்க.
ReplyDeleteyum yum,perfect with hot rice
ReplyDeletelooks perfect ..I should not even by mistake slid into ur blog when am hungry ..
ReplyDeleteதேங்ஸ் ஷாதிகா ஆன்டி டேஸ்டும் ரெம்ப நல்லா இருக்கும்,தேங்ஸ் தேவி மெய்யப்பன்,தேங்ஸ் பாயிஜா வெல்கம் டூ மை சைட்,தேங்ஸ் சித்ரா,தேங்ஸ் சசி உங்க சைட்டுக்கு வந்தேன் ரெம்ப நல்லா இருக்கு நிறைய பார்த்து இருக்கேன் செய்வதற்க்கு () ,தேங்ஸ் பத்மா, தேங்ஸ் பவித்ரா,தேங்ஸ் அண்ணாமலையான்,தேங்ஸ் ரேகா ஷோபன், தேங்ஸ் ஜலீலா அக்கா,தேங்ஸ் இமா உங்க கை வண்ணத்தை பார்த்தால் பொறாமையா இருக்கு:( தேங்ஸ் டாக்டர் முருகானந்தம், தேங்ஸ் அகல்ஸ் சாப்பாடு,தேங்ஸ் மேனகா, தேங்ஸ் அதிரா மட்டின் குருமா என்றால் என்னா எனக்கு புரியவில்லை:)
ReplyDeleteஎன் ஃபிரண்டோட சிஸ்டர் ஒரு டயட்டீஸியன் அவங்க தான் சொன்னாங்க புளியில்லாமல் சாப்பிட, புளி அதிகமாக சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் அளவு கம்மியாகும் தேங்ஸ் சக்தி தேங்ஸ் ஜீனோ தேங்ஸ் மலர்விழி,தேங்ஸ் மலர்காந்தி, தேங்ஸ் சுதாகர் பார்சல் அனுப்பிட்டா போச்சு, தேங்ஸ் மை கிட்சன்,தேங்ஸ் பவித்ரா.