Monday, November 30, 2009

நன்றி சுதாகர் அண்ணா




நன்றி சுபா
இந்த அவார்டை பிரெண்ட்ஸ்க்கு ஷேர் பண்ணுகிறேன் வாங்கபா வந்து வாங்கிகோங்க!!


சங்கீதா சுபாஷ்

பித்தனின் வாக்கு (சுதாகர்)

சிட்சாட்

மலர் காந்தி

மேனகா சத்யா

சங்கி

கீதா ஆச்சல்

தேனம்மை லஷ்மன்

ஜலீலாஅக்கா

ஷாதிகா அக்கா

பவித்ரா

சுமதி கார்த்திகேயன்

நித்யா

பத்மா

ரம்யா

இசை செல்வி (மை கிட்சன் )

பது கிட்சன்


ஹேமா

சித்ரா செந்தில்

அகல்ஸ்

விக்கி கிட்சன்

மலர்விழிரமேஷ்

அமமு

ஹைஸ் அண்ணா௧௨௬

பிரியா பிரசாத்

Tuesday, November 24, 2009

நன்றி அகல்ஸ் சாப்பாடு


இந்த அவார்டை பிரெண்ட்ஸ்க்கு ஷேர் பண்ணுகிறேன் வாங்க வந்து வாங்கிகோங்க!!

சங்கீதா சுபாஷ்

பித்தனின் வாக்கு (சுதாகர்)

சிட்சாட்

மலர் காந்தி

மேனகா சத்யா

சங்கி

கீதா ஆச்சல்

தேனம்மை லஷ்மன்


ஜலீலாஅக்கா

சாதிக்க akka

பவித்ரா

சுமதி கார்த்திகேயன்

நித்யா

பத்மா

ரம்யா

இசை செல்வி (மை கிட்சன் )

பது கிட்சன்

ஹேமா

சித்ரா செந்தில்


Thursday, November 19, 2009

ருணவிமோசக‌ மங்கள ஸ்தோத்ரம்


ஓம் ஸ்ரீ கணேசாய நம


மங்களோ பூமி புத்ரச் ச ருணகர்தா தனப்ரத
ஸ்திராஸனோ மஹாகாய: ஸர்வகர்மா வரோத க:

லோஹிதோ லோஹிதாக்ஷச் ச ஸாமகா னம் க்ருபாகர
தர்மாத்மஜ: குஜோ பௌமோ பூதிதோ பூமிநந்தன:

அங்காரகோ யமச்சைவ ஸர்வரோகாபஹாரக
வ்ருஷ்டே கர்தா(அ)பஹார்தா ச ஸர்வகாமபலப்ரத:

ஏதானி குஞ்சநாமானி நித்யம் ய: ச்ரத் தயா படேத்
ருணம் ந ஜாயதே தஸ்ய தன‌ம் சீக்ரம் அவாப்னுயாத்:

தரணீ கர்ப ஸம்பூதம் வித்யுத்காந்தி ஸமப்ரபம்
குமாரம் சக்தி ஹஸ்தம் தம் மங்களம் ப்ரணமாம்யஹம்:

ஸ்தோத்ரமங்காரகஸ்யைதத் படனீயம் ஸதாந்ருபி
ந தேஷாம் பௌமஜா பீடா ஸ்வல்பாபி பவதி க்வசித்:

அங்காரக மஹாபாக பகவன் பக்தவத்ஸல
த்வாம் நமாமி மமாசேஷம் ருணமாசு வினாசய:

ருணரோகாதி தாரித்ரியம் யே சான்யே ஹ்யபம்ருத்யுவ
பயக்லேச மனஸ்தாபா நச்யந்து மம ஸர்வதா:

அதிவக்ர துராராத்யா போகமுக்தா ஜிதாத்மனா
துஷ்டோ ததாஸி ஸாம்ராஜ்யம் ருஷ்டோ ஹரஸி தத்க்ஷணாத்:

விரிஞ்சிசக்ர விஷ்ணூனாம் மனுஷ்யானாம் து கா கதா
தேனத்வம் ஸர்வஸத்வேன க்ரஹராஜோ மஹாபலா:

புத்ரான் தேஹி தனம் தேஹி த்வாம் அஸ்மி சரணாகதா
ருணதாரித்ரிய துக்கேன சத்ரூனாம் ச பயத் ததா:

ஏபிர் த்வாதசபி: ச்லோகைர்ய: ச தராஸுதம்
மஹதேம் ச்ரியமாப்னோதி ஹ்யபரோ தனதோ யுவா:

இதி ஸ்ரீ ஸ்கந்தபுராணே பார்கவப்ரோக்தம் ருணமோசக
மங்கள ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்




Wednesday, November 11, 2009

நன்றி ஜலீலா

Friday, November 6, 2009

மைக்ரோவேவ் மைசூர் பாக்


தேவையான பொருட்கள்

கடலைமாவு ஒரு கப்

பவுடர் சுகர் இரண்டு கப்

நெய் ‍ 1/2 கப்

ஏலக்காய் 1 டீஸ்பூன்

பால் 2 மேசைக்கரண்டி
செய்முறை

கடலை மாவை சிறிது நெய் விட்டு சட்டியில் நன்கு வறுத்து கொள்ளவும் அப்போ தான் பச்ச வாசனை வராது , மைக்ரோவேவ் பவுலில் கடலைமாவு,பவுடர்சுகர், நெய், ஏலக்காய் எல்லாவற்றையும் சேர்த்து நாலரை நிமிடம் வைக்கவும்.இரண்டு நிமிடம் கழுந்தவுடன் அதை வெளியில் எடுத்து இரண்டு டேபிள் ஸ்பூன் பால் விட்டு கலக்கவும்.மீண்டும் மைக்ரோவேவில் 2 நிமிடம் வைத்து சிறிது நேர‌ம் ஆன‌வுட‌ன் வெளியில் எடுத்து ஒரு கிளறு கிளறி உடனே ஒரு தட்டில் போட்டு பரப்பி, சிறிது ஆறியவுடன் துண்டுகள் போடவும்.2நிமிட‌த்திற்கு ஒரு முறை வெளியில் எடுத்து கிள‌றி கொள்ள‌வும் சிறிது முந்திரி ப‌வுட‌ர் சேர்த்தால் ந‌ல்லா ரிச்சா இருக்கும்
உட‌னே சாப்பிட்டால் ந‌ல்லா ஷாஃப்டா இருக்கும் நேர‌ம் ஆக‌ ஆக ஷாஃப்டா இருக்காது

சோயா வடை


தேவையான பொருட்கள்

பிரெட் ‍ தேவைக்கேற்ப

சோயா 100 கிராம்
உருளைக்கிழங்கு 2
மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் 1/2 டீஸ்பூன்
வெங்காயம் 1
பச்ச மிளகாய் 2
இஞ்சி சிறிது துருவியது
கொத்தமல்லி 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் ‍ ஒரு பின்ச்
லெமன் ஜீஸ் ‍ 1/2டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
செய்முறை:

சோயாவை 8 மணி நேரம் ஊறவைத்து, மசிக்கும் அளவு வேக வைத்து, ஒன்றிரண்டாக மசித்து வைக்கவும்.கிழ‌ங்கை வேக‌வைத்து கொள்ள‌வும் சட்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சமிளகாய் கட் பண்ணி போட்டு வதக்கவும் உருளைக்கிழங்கை உதிர்த்து போட்டு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, உப்பு, மல்லி இலை சேர்த்து நன்கு வதக்கி வைக்கவும்.சிறிதளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.பிரட் ஸ்லைசை ஓரத்தை கட் பண்ணி விட்டு, தண்ணீரில் நனைத்தவுடன் உடனே பிழிந்து நடுவில் சோயா உருண்டையை வைத்து மூடி, உருட்டி, எண்ணெயில் பொரிக்கவும்.

கொத்தமல்லி சட்னி, சாஸுடன் ந‌ல்லா இருக்கும்.


சர்க்கரை பொங்கல்


தேவையானவை :
பச்ச அரிசி 2 கப்
பாசி பருப்பு 1/2கப்
பால் 1/2 கப்
முந்திரிப்பருப்பு 10
வெல்லம் 2 1/2 கப்
நெய் 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் 1 டீஸ்பூன்
திராட்சை 4
செய்முறை:
பாசி பருப்பை அரை ஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.சிறிது நெய்யில், முந்திரிப்பருப்பையும் , திராட்சையையும் பொன்னிறமாக வறுக்கவும். ஒரு பாத்திரத்தில் அரிசி ப‌ருப்பு ஒன்றாக‌ போட்டு 5 க‌ப் த‌ண்ணீர் + பால் சேர்த்து குக்கரில் மூடி வேகவிடவும் 4 சவுண்ட் வரணும் வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கரைந்ததும் வடிகட்டவும்.அரிசி ப‌ருப்பு வெந்த‌தும் இற‌க்கி ந‌ன்கு ம‌சிக்க‌வும்.அதில் க‌ரைத்து வைத்த‌ வெல்ல‌த்தை சேர்த்து அடுப்பில் வைத்து ந‌ன்கு கிள‌ற‌வும் கெட்டி ஆன‌தும் ஏல‌ப்பொடி வ‌றுத்து வைத்த‌ முந்திரி பருப்பு போட்டு நெய் விட்டு இற‌க்க‌வும்
ரெம்ப‌ சிம்பிளான‌து ஈசியான‌து

சீடை


தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி -- 4க‌ப்
உளுந்தமாவு -- 1க‌ப்
ப‌ட்டர் -- 3 ஸ்பூன்
எள் 1 டீஸ்பூன்
தேங்காய் -- 1ஸ்பூன்
உப்பு
எண்ணெய்
செய்முறை:
அரிசியை 4 ம‌ணி நேர‌ம் ஊற‌ வைத்து தேங்காய்,உப்பு சேர்த்து நைசாக‌ அரைக்க‌வும். அதில் உளுந்த‌ மாவு, எள் எல்லாம் சேர்த்து ந‌ன்கு பிசைய‌வும் பின் அவற்றை சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணையில் போட்டு பொரித்தெடுக்கவும் வழு வழு என்று உருட்டக்கூடாது மொத்தமாக உருட்டி போடவும் ரெம்ப நேரம் காய விடக்கூடாது

Monday, November 2, 2009

முறுக்கு




தேவையான பொருட்கள்
பச்சரிசி - 4 கப்
உளுந்தம் பருப்பு ‍ 11/2 க‌ப்
சீரகம் 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் ‍ பொறிக்க‌
பட்டர் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
செய்முறை:
அரிசியை ஊறவைத்து கிரைண்டரில் நன்கு அரைத்து வைக்கவும். பருப்பை பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் பவுடராக்கி கொள்ளவும்.உப்புத் தண்ணீர் தெளித்து சீரகம், பட்டர் போட்டு நன்கு பிசையவும் பிசைந்த மாவை முறுக்குக் குழலில் நட்சத்திர அச்சைப் போட்டு மாவை அதனுள் வைத்து காயவைத்த‌ எண்ணெயில் முறுக்குப் பிழிந்து எடுக்கவும்.

மைக்ரோவேவ் பக்கோடா





வேர்க்கடலை ‍ 2 கப்
தண்ணிர் 1 டீஸ்பூன்
கடலை மாவு ‍ 2டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு 1டேபிள்ஸ்பூன்
மிளகாய் துள் 1 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய் சிறிது
செய்முறை
ஒரு மைக்ரோவ் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு 5 நிமிடங்கள் வைக்கவும்மூட கூடாது. வேற பாத்திரத்தில் வேர்க்கடலை,அரிசிமாவு,கடலைமாவு,சோள மாவு, தண்ணிர் விட்டு பிசறி வைக்கவும்.சூடான எண்ணெய் அதன் மேல் எல்லாவற்றிலும் படும்படி நன்றாககலக்கவும்.மைக்ரோவில் 7 நிமிடங்கள் வைக்கவும்.இடையே ஒரு தடவை வெளியில் எடுத்து ஸ்பூனால் நன்றாக கிளறிமறுபடியும் 5 நிமிடங்கள் வைக்கவும்.ரெம்ப‌ நேர‌ம் வைத்தால்கருகி விடும் இடை இடையே கிள‌றி கொண்டே இருக்க‌வும் மாவுக‌ளை அதிக‌ம் சேர்க்க‌கூடாது