
தேவையானவை :
பச்ச அரிசி 2 கப்
பாசி பருப்பு 1/2கப்
பால் 1/2 கப்
முந்திரிப்பருப்பு 10
வெல்லம் 2 1/2 கப்
நெய் 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் 1 டீஸ்பூன்
திராட்சை 4
செய்முறை:
பாசி பருப்பை அரை ஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.சிறிது நெய்யில், முந்திரிப்பருப்பையும் , திராட்சையையும் பொன்னிறமாக வறுக்கவும். ஒரு பாத்திரத்தில் அரிசி பருப்பு ஒன்றாக போட்டு 5 கப் தண்ணீர் + பால் சேர்த்து குக்கரில் மூடி வேகவிடவும் 4 சவுண்ட் வரணும் வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கரைந்ததும் வடிகட்டவும்.அரிசி பருப்பு வெந்ததும் இறக்கி நன்கு மசிக்கவும்.அதில் கரைத்து வைத்த வெல்லத்தை சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கிளறவும் கெட்டி ஆனதும் ஏலப்பொடி வறுத்து வைத்த முந்திரி பருப்பு போட்டு நெய் விட்டு இறக்கவும்
ரெம்ப சிம்பிளானது ஈசியானது
வெரி நைஸ்!!நானும் நேற்று இப்படிதான் கல்கண்டில் செய்தேன்.
ReplyDeleteThanks Menaga!
ReplyDeleteGOODDDDDD
ReplyDeleteThanks!
ReplyDelete