Tuesday, September 29, 2009

அபிராமி ஸ்லோகம்


நமஸ்தே லலிதே மி தேவி
ஸ்ரீமத் ஸிம்ஹாச நேஸ்வரி
பக்தானாம் இஷ்ட தேஹிமி மாத:
ஸ்ரீ அபிராமி நமோஸ்துதே

ஸ்ரீ லலிதையே, உனக்கு நமஸ்காரம். தேவி, எழில்மிகு சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவளே! அடியார்கள் கோருவதைத் தருபவளே! ஸ்ரீ அபிராமியே உனக்கு நமஸ்காரம்.

சந்த்ரோதயம் கிருதவதி
தாடங்கேன, மஹேஸ்வரி
ஆயுர்தேஹி ஜகன்மாத:
ஸ்ரீ அபிராமி நமோஸ்துதே

மகேஸ்வரி, ஒரு தாடங்கத்தின் மூலம் முழு நிலவை உண்டாக்கக் கூடியவள் நீ. பக்தர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும் ஸ்ரீ அபிராமியே உனக்கு நமஸ்காரம்.

ஸுதா கடேச ஸ்ரீகாந்தே
சரணாகத வத்ஸலே!
ஆரோக்யம் தேஹிமே
நித்யமஸ்ரீ அபிராமி நமோஸ்துதே

அமிர்தகடேஸ்வரனை காந்தனாக அடைந்து சரணடைந்தவர்களைக் காப்பாற்றும் வாத்சல்ய சுபாவம் உள்ளவளே... அம்மா, அபிராமியே உனக்கு நமஸ்காரம். எனக்கு நாளும் நல்ல ஆரோக்கியத்தை அருளுவாய்!

கல்யாணம் மி மங்களம் தேஹி
ஜகத் மங்கள காரிணி
ஐஸ்வர்யம் தேஹிமே நித்யம்
ஸ்ரீ அபிராமி நமோஸ்து தே

கல்யாணி, மங்களத்தைக் கொடுப்பவளே! சர்வலோகங்களையும் மங்களகரமாக்குபவளே! நிலையான ஐஸ்வர்யம் கிடைக்கும்படி செய்வாயாக. அபிராமித்தாயே உனக்கு நமஸ்காரம்.

சந்த்ர மண்டல மத்யஸ்தே
மகாத்ரிபுர சுந்தரி !
ஸ்ரீ சக்ரராஜ நிலயே ஹி
ஸ்ரீஅபிராமி நமோஸ்துதே !!

சந்திர மண்டலத்தின் நடுவே அமர்ந்த மகாதிரிபுரசுந்தரி நீயே அல்லவா! ஸ்ரீ சக்ரராஜதானியின் அரசியான அபிராமியே உனக்கு நமஸ்காரம்.

ராஜீவ லோசனே, பூர்ணே
பூர்ணசந்த்ர விதாயினி !
சௌபாக்யம் தேஹி நித்யம்ஸ்ரீ
ஸ்ரீ அபிராமி நமோஸ்துதே !!

தாமரை போன்ற கண்ணழகியே! முழுமையானவளே, முதன்மையானவளே, முழு நிலவைக் காட்டுபவளே, எனக்கு எப்பொழுதும் சௌபாக்கியத்தை அருளுவாயாக! ஸ்ரீ அபிராமியே, உனக்கு நமஸ்காரம்.

கணேச ச ஸ்கந்த ஜநநி
வேதரூபே, தனேஸ்வரி
வித்யாம் ச தேஹிமே நித்யம்
ஸ்ரீ அபிராமி மி நமோஸ்து தே

ஆனைமுகனுக்கும் ஆறுமுகனுக்கும் அன்னையே, வேதசொரூபியே! செல்வத்துக்கு ஈஸ்வரியே... எனக்கு வித்யையில் கீர்த்தியைத் தருபவளே! ஸ்ரீ அபிராமியே! உனக்கு நமஸ்காரம்.

ஸுவாஸிநிப்ரியே மாதா:
ஸௌமாங்கல்ய விவர்த்தினி
மாங்கல்யம் தேஹிமே நித்யம்
நமோஸ்துதே

சுவாசினிகளால் போற்றப்படுபவளே. சௌமாங்கல்யப் பதவியை அதிகரிப்பவளே (பெண்கள் கணவருடன் வாழும் காலத்தை அதிகரிக்கச் செய்பவளே.) எனக்கு நித்யசௌ மாங்கல்யத்தை அருள்வாய் தாயே...! ஸ்ரீ அபிராமியே! உனக்கு நமஸ்காரம்!

மார்க்கண்டேய மஹாபக்த
ஸுப்ரமண்ய ஸுபூஜிதே
ஸ்ரீராஜராஜேஸ்வரி த்வம் ஹி
ஸ்ரீஅபிராமி நமோஸ்து தே

மார்க்கண்டேயராலும் மகாபக்தரான சுப்ரமண்யராலும் (அபிராமி பட்டர்) நன்கு பூஜை செய்து வழிபடப்பட்டவளே! ஸ்ரீ ராஜராஜேஸ்வரி நீயே அல்லவா... ஸ்ரீ அபிராமியே உனக்கு நமஸ்காரம்!

ஸாந்நித்யம் குரு கல்யாணி
மமபூஜா க்ருஹே சுபே
பிம்பே தீபே ததா புஷ்பே
ஹரித்ராகுங்குமே மம

கல்யாணியே (மங்களம் அருள்பவளே) என்னுடைய பூஜாகிரகத்தில் உள்ள திவ்யமான உனது பிம்பம், தீபம், புஷ்பம் மற்றும் மஞ்சள் குங்குமத்தை உன்னருளால் சாந்நித்தியமடையச் செய்வாயாக.

ஸ்ரீஅபிராம்யா இதம் ஸ்தோத்ரம்:
ய : படேத் சக்தி சந்நிதௌ
ஆயுர் பலம் யசோ வர்ச்சோ
மங்களம் ச பவேத்ஸுகம்

ஸ்ரீஅபிராமியன்னையின் இந்தத்துதியினை அகம் ஒன்றி தினம் சொல்பவர்க்கு ஆயுள், பலம், கீர்த்தி, ஆரோக்யம், இவற்றோடு சகல சௌபாக்யமும் கிடைக்கும்

துளசி கவசம்

அஸ்ய ஷ்ரீ துளஸீகவச ஸ்தோத்ர
மந்த்ரஸ்ய ஷ்ரீ மகாதேவருஷி: அனுஷ்டுப் சந்த:
ஷ்ரீ துளஸி தேவதா_மனஸோபீஷ்ட காமாநி ஸர்வ
வித்யார்த்தம் ஜபே விநியோக: ஸ்ரீ

இந்த துளசி கவச ஸ்தோத்ர மந்திரத்துக்கான ரிஷி, சாக்ஷாத் மகாதேவன். இது அனுஷ்டுப் சந்தஸ் (ஈரடி) என்ற வகையில் இயற்றப்பட்டது. இதன் தேவதை ஷ்ரீ துளசி மாதா. மனதில் தோன்றும் ஆசைகளை எல்லாம் நிறைவேற்றுவதில் பிரசித்தி பெற்றது.

துலஸீ ஷ்ரீமஹாதேவி நம: பங்கஜ தாரிணீ !
ஸிரோமே துளஸி பாதுபாலம் பாதுயஸஸ்வினி !!

துளசி என்கிற மகாதேவி, பங்கஜதாரிணி (தாமரையை ஏந்தியவள்) எனது தலையைக் காக்கட்டும். புகழ்மிக்கவள், மேன்மையானவள், நெற்றியைக் காக்கட்டும்.
த்ரு ஸோவே பத்மநயனே ஷ்ரீஸகி ஸ்ரவணே மம !
க்ராணம் பாது ஸுகந்தாமே முகஞ்ச ஸுமுகீ மம !!

கண்களைத் தாமரைக் கண்ணாள் காக்கட்டும். மகாலக்ஷ்மியின் தோழி, காதுகளைக் காக்கட்டும். சுகந்தா மூக்கைக் காப்பாற்றட்டும். எழில்வதனீ என் முகத்தைக் காப்பாற்றட்டும்.

ஜிஹ்வாம் மே பாது ஸுபதா கண்டம் வித்யாமயீ மம !
ஸ்கந்தௌ கல்ஹாரிணீ பாது ஹ்ருதயம் விஷ்ணு வல்லபா !!

சுபதையானவள் நாக்கைக் காக்கட்டும். (சுபதை - நல்வாக்கு கொடுப்பவள்).
வித்யாமயி கழுத்தைக் காக்கட்டும். கல்யாணி தோள்களை ரட்சிக்கட்டும்: விஷ்ணு வல்லபை என் இதயத்தைக் காப்பாற்றட்டும்.

புண்யதாமே பாதுமத்யம் நாபிம் ஸௌபாக்கியதாயினீ !
கடிம் குண்டலிநீ பாது ஊரு நாரத வந்திதா !!

புண்யதா மத்திய பாகத்தைக் காக்கட்டும். சௌபாக்கிய தேவி நாபியை (தொப்புளை) ரட்சிக்கட்டும். குண்டலினி இடுப்பைக் காக்கட்டும். நாரதரால் தொழப்பட்ட தேவி, என் தொடையை காத்திடட்டும்.

ஜனநீ ஜானுநீ யாது ஜங்கே ஸகலவந்திதா !
நாராயணப்ரியா பாதௌ ஸர்வாங்கம் ஸர்வரக்ஷிணி !!

ஜனனீ முழங்கால்களை ரக்ஷிக்கட்டும். நாராயணி கால்களை ரக்ஷிக்க வேண்டும். ஸர்வரக்ஷகி (அனைத்தையும் காப்பவள் எல்லா அங்கத்தையும் காப்பாற்றட்டும்.

ஸங்கடே விஷமே துர்கே பயே வாதே மஹா ஹவே !
நித்யம் ஹா ஸந்த்யோ: பாது துலஸி ஸர்வதஸ்ஸதா !!

கஷ்டகாலங்களிலும், பயத்திலும், யுத்தத்திலும், இரவு பகல் சந்தியா காலங்களிலும் எப்பொழுதும் துளசிதேவி என்னை ரக்ஷிக்க வேண்டும்.

இதீதம் பரமம்குஹ்யம் துலஸ்யா: கவசாம்ருதம் !
மர்த்யானா மம்ருதார்த்தாய பீதாநாம் பயாயச !!

இத்தகைய பரம ரகசியமானதும் புனிதமானதுமான துளசி கவசம் அமிர்தம் போன்றது. மனிதர்களின் பயத்தைப் போக்குவதற்காகவும்....

மோக்ஷாய சமுமுக்ஷீணாம் த்யாயினாம் தியான யோக க்ருத் !
வஸ்ய வஸ்ய காமானாம் வித்யாயை வேத வாதினாம் !!

முக்தியடைய விரும்புவோர்க்கு மோக்ஷத்தையும், தியானத்தை விரும்பும் மனிதர்களுக்கு தியான யோகத்தையும், வசியம் செய்பவர்களுக்குத் தேவையானதையும், ஞானத்தை (வேதம் என்றால் ஞானம்) விரும்புவோருக்கு வித்தையையும் அளிக்கவும்..
.
த்ரவீணாய தரித்ராணாம் பாபினாம் பாப சாந்தயே !
அன்னாய க்ஷீதிதானஞ்ச ஸ்வர்காய ஸ்வர்க்க மிச்சதாம் !!

தரித்திரனுக்கு திரவியம் அளிக்கவும், பாபம் செய்தவர்களுக்கு பரிகாரம் மற்றும் பிராயச்சித்தம் கிடைக்கவும், பசிப்பிணியில் உழல்பவனுக்கு அன்னம் குறையாமல் கிடைக்கவும், சொர்க்கத்தை விரும்புபவருக்கு சொர்க்கம் கிடைக்கவும்....

பஸவ்யம் பஸுகாமானாம் புத்ரதம்புத்ர காங்க்ஷிணாம் ! ராஜ்யாய ப்ரஷ்டா ராஜ்யானாம் மஸாந் தானாஞ்ச ஸாந்தமே !!

செல்வத்தைக் கோருபவன் செல்வத்தையும், புத்திரன் வேண்டுமென்று ஆசைப்படுவன் புத்திரப் பேறு பெறவும், ராஜ்யத்தை இழந்தவன் ராஜ்யத்தைப் பெறவும்..
.
பக்த்யர்த்தம் விஷ்ணுபக்தானாம் விஷ்ணௌ ஸர்வாந்த ராத்மநி
ஜாப்யம் த்ரிவர்க்க ஸித்யர்த்தம் க்ருஹஸ்தேன விசேஷத: !!

விஷ்ணுபக்தர்களாக இருந்து சர்வாந்தர்யாமியாக விளங்கிடும் மகாவிஷ்ணுவின் அருளைப் பெற்று தர்மம், அர்த்தம் காமம் என்ற மூன்றையும் சித்தி பெற விரும்பும் இல்லறத்தார்..
.
உத்யம் தம்சூர்ய கிரணமுபஸ்த்தாய கிருதாஞ்சலி:
துலஸிகாந நேதிஷ்டான் ஆஸினோவா ஜபேதி தம் !!

இத்தகைய சித்திகளை எவர் உடனே அடைய விரும்புகிறாரோ அவர் சூரியனுக்கெதிரில் நின்று கரங்களைக் கூப்பி இந்தக் கவசத்தை அவசியம் ஜபிக்க வேண்டும். துளசி வனத்தில் ஜபிக்கிறவன் கோரிய பயனை உடனடியாக அடைவான்.

ஸர்வான் காமான் அவாப்னோதி ததைவ மம ஸந்நிதம் !
மமப்ரியகரம் நித்யம் ஹரிபக்தி விவர்தனம் !!

என்னுடைய மனதுக்குப் பிரியமான இந்த ஹரி பக்தி மயமான மந்திரத்தை தினமும் படிப்பவரின் எல்லா ஆசைகளும் நிறைவேறுவதோடு, என் சந்நதியையும் அவன் அடைகிறான்.

யாஸ்யான் ம்ருதப்ரஜா நாரி தஸ்யா அங்கம் ப்ரமார்ஜயேத் !
ஸபுத்ரம் லபதே தீர்க்க ஜீவினம் சாப்ய ரோகிணம் !!

வந்த்யாய மார்ஜயே தங்கம் குஸைர் மந்த்ரேண ஸாதக
ஸாபி ஸம்வத்சரே தேவ கர்ப்பம் தத்தே மனோஹரம் !!

இந்த மந்திரத்தைக் கூறி தர்ப்பையால் சரீரத்தைத் தடவினால் பல முறை கருத்தரிக்காத பெண்ணும், நிச்சயம் கருத்தரித்து நல்ல ஆயுஷ்மானான புத்திரனைப் பெறுவாள்; பெரும் வியாதியஸ்தர்கள் நோயிலிருந்து விடுபடுவர்.
அஸ்வத்தே ராஜவஸ்யார்த்தி ஜலேதக்னேஸ்ஸுருபபர்க
பலாஸமூலே வித்யார்த்தி தே ஜோர்த்தியமு கோரவே !!

ராஜவஸ்யம் (அரசாங்க ஆதரவு) வேண்டுபவன் அரசமரத்தினடியிலும், நல்ல அழகு வேண்டுபவள் நீர் நிலைகளின் கரையிலும், கல்வி வேண்டுபவன் பலாச மரத்தின் கீழும் இருந்து ஜபம் செய்ய வேண்டிய கவசம் இது.

கன்யார்த்தி சண்டிகா கேஹே ஸத்ரு ஹத்யை க்ருஹேமம!
ஷ்ரீகாமோ விஷ்ணு கேஹேச உத்யானே ஸ்திரீ வஸாபேத் !!

நல்ல கன்னிகையை மணக்க விரும்புபவன் சண்டியின் கோயிலிலும், பகையை வெல்ல விரும்புபவன் எனது கோயிலிலும், (சிவாலயம்) கோரியவற்றைப் பெற விஷ்ணுவின் கோயிலிலும், மனம் விரும்புபவளை மணக்க விரும்புபவன் உத்தியான வனத்திலும் ஜபம் செய்ய வேண்டும்.

கிமத்ர பஹுநோக்தேன ஸருணுஸைன் யேஸதத்வத: !
யம்யம் காம மபித்யாயே தத்தம் ப்ராப் னோத்ய ஸம்ஸயம் !!

இக்கவசத்தை ஜபம் செய்ய வேண்டியதன் அவசியத்தைப் பற்றி அதிகம் சொல்வானேன்? எவரெவர் எந்தெந்தப் பலனைக் குறித்து இதைச் சொல்கிறாரோ அவரவர் அந்தந்தப் பலனை அடைகிறார்.

மமகேஹ கதஸ்த்வம்து த்ராகஸ்ய வதேச்சயா
ஜபன் ஸ்தோத்ரஞ்ச கவசம் துலஸீகத மானஸ:

ஆகையால் தாரகாசுரனை வதம் செய்வதற்காக இந்த என்னுடைய ஆலயத்தில் இருக்கிற நீ, துளசி தேவியினிடம் மனத்தை இருத்தி இக்கவசத்தை ஜபம் செய்யக்கடவாய். (சிவபெருமான் கூறியது)

மண்டலாத் தாரகம் ஹமதா
பிஷ்யசி ந ஸம்ஸய: !!

இப்படி தியானம் செய்தால் ஒரு மண்டலத்துக்குள் தாரகாசுரனை ஜெயிப்பாய், இதில் ஐயமில்லை.
அசுரனை வெல்ல ஆறுமுகனுக்கு அரன் சொன்ன இக்கவசத்தைச் சொல்வோர், ஆனந்த வாழ்வு பெறுவர் என்பது நிச்சயம்

Tuesday, September 22, 2009

கத்தரிக்காய் குழம்பு


தேவையான‌வை:

க‌த்த‌ரிக்காய் 8

வெங்காயம் - 2

தேங்காய் துருவல் - 4டேபிள்ஸ்பூன்

கசகசா 1 டீஸ்பூன்,

மிளகாய் வத்தல் - 8

பூண்டு 4 பீஸ்,

சீரகம் 1/2 டீஸ்பூன்,

தனியா தூள் 2 ஸ்பூன்,

மஞ்சள் தூள்‍ 1/2 டீஸ்பூன்

புளி சிறிது

த‌க்காளி 1

கறிவேப்பிலை - சிறிது

வெல்லம் சிறிது

கடுகு 1/2 டீஸ்பூன்,

உப்பு

எண்ணெய் - 4 ஸ்பூன்.

செய்முறை :

கத்தரிக்காயை முழுதாக நான்காக கட் பண்ணி தண்ணீரில் போட்டு வைக்கவும்.புளியை ஊற வைத்து, கரைத்து வடி கட்டவும்.சட்டியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மிளகாய், சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.ஆறிய பின், தேங்காய், கசகசா, தனியா தூள், உப்பு சேர்த்து, நைசாக அரைக்கவும்.கத்தரிக்காயினுல் அரைத்த விழுதை உள்ளே திணிக்கவும்.மீதியுள்ள விழுதை புளிக்கரைசலில் கரைத்து வைக்கவும்.வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, பூண்டு, கறிவேப்பிலை தாளித்து, தக்காளி கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்.எண்ணெயிலேயே கத்தரிக்காய் வேக வேண்டும்.புளிக்கரைசலை ஊற்றி, மஞ்சள் தூள், வெல்லம் போட்டு கொதிக்க விடவும்.கத்தரிக்காய் வெந்து குழம்பு கெட்டியானதும் இறக்கவும்.
தக்காளி இல்லாமலும் செய்யலாம் .


Friday, September 18, 2009

பருப்பு வடை


கடலை பருப்பு - 1 கப்(ஊறவைக்க‌)
வெங்காயம் 1 கட் பண்ணவும்
பச்சை மிளகாய் - 3க‌ட் ப‌ண்ண‌வும்
இஞ்சி சிறிது
கறிவேப்பிள்ளை சிறிது
மல்லி இலை சிறிது
உப்பு
அரிசி மாவு - 1 ஸ்பூன்
எண்ணை
செய்முறை :
பருப்பை மிக்சியில் கரகரப்பாக அரைக்க‌.பின்பு அதனுடன் மற்ற எல்லா பொருட்களையும்(எண்ணையைத் தவிற) கலந்து வடைகளாகத் தட்டி எண்ணையை காய வைத்து நல்ல சிவக்க பொரித்து எடுக்கவும்.
ஆனியன் இல்லாமலும் செய்யலாம்

Thursday, September 17, 2009

பாவக்காய் வறுவல்

தேவையானவை :
பாவக்காய் 1/4கிலோ
ஆனியன் பாதி
இஞ்சி,பூடு பேஸ்ட் 1டீஸ்பூன்
சில்லி பவுடர் 1டீஸ்பூன்
தனியா பவுடர் 1டீஸ்பூன்
உப்பு
வெல்லம் சிறிது
புளி சிறிது
செய்முறை:
காயை சின்னதாக கட் பண்ணவும்.புளி தண்ணீர் விட்டு வேக விடவும்.சட்டியில் கடுகு தாளித்து ஆனியன் இஞ்சி பூடு பேஸ்ட் போட்டு நன்கு வதக்கவும் வேகவைத்த காயை போட்டு சில்லி பவுடர்,தனியா பவுடர்,உப்பு மஞ்சள் தூள் போட்டு நன்கு கிளறிவிடவும் கடைசியில் வெல்லம் போட்டு இறக்கவும்.

வெண்டைக்காய் வறுவல்


வெண்டைக்காய் 1 பவுண்ட்
ஆனியன் 1
சோம்பு 1 டீஸ்பூன்
தேங்காய் 1டீஸ்பூன்
மிளகு தூள் 1/2டீஸ்பூன்
பூண்டு 4
சில்லி பவுடர் 1 டீஸ்பூன்
தனியா தூள் 1டீஸ்பூன்
மஞ்சள் தூள்
கடுகு
கறிவேப்பிள்ளை
செய்முறை
சட்டியில் கடுகு கறிவேப்பிள்ளை தாளித்து ஆனியன், பூண்டு போட்டு நன்கு வதக்கவும். வெண்டைக்காயை ரவுண்டாக கட் பண்ணி போட்டு நன்கு வதக்கவும். 10 நிமிடம் வதக்கவும்.உப்பு தனியா தூள்,சில்லி பவுடர் போட்டு வதக்கி மிளகு தூள்,மஞ்சள்தூள் போடவும்.கடைசியாக தேங்காய் துருவல் போட்டு கிளறி விடவும்.

வெஜ் குருமாபீன்ஸ் 10
பட்டாணி 1/4 கப்
காலிஃபிளவர் 10 பீஸ்
உருளைகிழங்கு 2
கேரட் 2
அரைக்க‌:
கசகசா 1டீஸ்பூன்
முந்திரி பருப்பு 6
பச்சமிளகாய் 5
சோம்பு 1டீஸ்பூன்
இஞ்சி சிறிது
பூண்டு 2
பால் அரை கப்

தாளிக்க‌:

பட்டை 1
கிரம்பு 2
ஏலம் 2
நெய் சிறிது

செய்முறை:
காய்க‌ளை எல்லாம் ஒரு இஞ்ச் அள‌விற்கு க‌ட் ப‌ண்ணி வேக‌வைத்து கொள்ள‌வும்.
வேகவைத்த காயுடன் அரைத்ததை போட்டு நன்கு கிளறி தாளிக்க வேண்டியதை தாளித்து கொள்க சுடவைத்து ஆறவைத்த பாலை ஊற்றி கலக்கவும் வெஜ் குருமா ரெடி.

குறிப்பு:
இஞ்சி, பூண்டு வேண்டுமென்றால் போடலாம், இல்லாம‌லும் செய்யலாம்

பீன்ஸ் உசிலி


பீன்ஸ் :500 கிராம்
துவரம் பருப்பு :100 கிராம்
கடலை பருப்பு :100 கிராம்
மிளகாய் வத்தல் : 8
உப்பு
தாளிக்க:
கடுகு
ஊளுத்தம் பருப்பு
கருவேப்பிலை
செய்முறை
முதலில் பருப்புகள் இரண்டையும் சுமார் ½ மணிநேரம் ஊற வைக்கவும்.
பீன்ஸை பொடியாக கட் பண்ணவும்.பருப்புடன் மிளகாய் வத்தல்,உப்பு சேர்த்து கெட்டியாக நறநற வென்று அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கலவையை இட்லி தட்டில் வைத்து சுமார் 10 நிமிடங்கள் ஆவியில் வைக்கவும்.
வெந்தக் கலவையை தட்டில் கொட்டி உதிர்த்துக் கொள்ளவும்.
இப்பொழுது உசிலி தயார்.
ஒரு வாணலியில் எண்ணையை சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு,பெருங்காயத்தை தாளித்து, அதனுடன் உசிலியை சேர்த்து மிதமான தீயில் நன்றாக வதக்கவும்.
உசிலி சிறிது நிறம் மாறும் போது வெந்த பீன்ஸை போட்டு சுமார் இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.

Tuesday, September 15, 2009

கனகதார ஸ்தோத்ரம்1.அங்க(3)ம் ஹரே: புளக பூ(4)ஷணம் ஆச்(H)ரயந்தீ
ப்(3)ருங்கா(3)ங்க(3)னேவ முகுளாப(4)ரணம் தமாலம்
அங்கீ(3)க்ருதாகில விபூ(4)தி: அபாங்க(3)லீலா
மாங்க(3)ல்யதா(3)ஸ்து மம மங்கள தே(3)வதாயா:
மாலவன் மார்பில் நிற்கும்மங்கலக் கமலச் செல்வீ!

மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்நீலமா மேகம் போல நிற்கின்ற திருமாலுந்தன்நேயத்தால் மெய் சிலிர்த்து நிகரிலாச் செல்வம் கொண்டான்!மாலவன் மீது வைத்த மாயப்பொன் விழிஇ ரண்டைமாதுநீ என்னி டத்தில் வைத்தனை என்றால் நானும்காலமா கடலில் உந்தன் கருணையால் செல்வம் பெற்றுகன்ணிறை வாழ்வு கொள்வேன் கண்வைப்பாய் கமலத்தாயே

2 -முக்தா(4) முஹுர் வித(3)த(4)தீ வத(3)னே முராரே:
ப்ரேமத்ரபா ப்ரணிஹிதானி க(3)தாக(3)தானி
மாலா த்(3)ருசோ(H)ர் மது(4)கரீவ மஹோத்பலே யா
ஸா மே ஸச்(H)ரியம் தி(3)ச(H)து சாக(3ரஸம்ப(4)வாய

நீலமா மலரைப் பார்த்து நிலையிலா(து) அலையும் வண்டுநிற்பதும் பறப்ப தும்போய் நின்விழி மயக்கம் கொண்டுகோலமார் நெடுமால் வண்ணக் குளிர்முகம் தன்னைக் கண்டு,கொஞ்சிடும், பிறகு நாணும் கோதையார் குணத்தில் நின்று!ஏலமார் குழலி அந்த இருவிழி சிறிது நேரம்என்வசம் திரும்பு மாயின் ஏங்கிய காலம் சென்றுஆலமா மரங்கள் போல அழிவிலாச் செல்வம் கொண்டுஅடியவன் வாழ்வு காண்பேன் அருள்செய்வாய் கமலத்தாயே !
3.ஆமீலிதாக்ஷ மதி(4)க(3)ம்ய முதா(3) முகுந்த(3)ம்
ஆனந்த(3)கந்த(3) மனிமேஷ-மனங்கதந்த்ரம்
ஆகேகரஸ்தித கனீநிக பக்ஷ்ம நேத்ரம்
பூ(4)த்யை ப(4)வேன்மம பு(4)ஜங்க(3) ச(H)யாங்க(3)னாயா:

நற்குடி பிறந்த பெண்கள் நாயகன் தனைப் பார்த்தாலும்நாணத்தால் முகம்புதைத்து நாலிலோர் பாகம் பார்ப்பார்!பற்பல நினைத்தபோதும் பாதிக்கண் திறந்துமூடிபரம்பரைப் பெருமை காப்பார் !பாற்கடல் அமுதே! நீயும் அற்புத விழிகளாலேஅச்சுத முகுந்தன் மேனி அப்படிக் காண்பதுண்டுஆனந்தம் கொள்வதுண்டு !இப்பொழு(து) அந்தக் கண்ணை என்னிடம் திருப்பு தாயே !இருமையும் செழித்து வாழ இகத்தினில் அருள்வாய் நீயே !

4. பா(3)ஹ்வந்தரே முரஜித: ச்(ஹ்)ரிதகௌஸ்துபே(4) யா
ஹாராவளீவ ஹரிநீலமயீ விபா(4)தி
காமப்ரதா(3) ப(4)க(3)வதோ(அ)பி கடாக்ஷமாலா
கல்யாணமாவஹது மே கமலாலயாயா

மதுஎனும் பெயரில் வாழ்ந்த மனமிலா அரக்கன் தன்னைமாபெரும் போரில் வென்ற மாலவன் மார்பி லாடும்அதிசய நீலமாலை அன்னநின் விழிகள் கண்டுஅண்ணலும் காலந்தோறும் ஆனந்தம் கொள்வதுண்டு !பதுமநேர் முகத்தினாளே! பதுமத்தில் உறையும் செல்வி!பார்கடல் மயக்கும் கண்ணை பேர்த்தெடுத்தென்மேல் வைத்தால்பிழைப்பன்யான் அருள்செய்வாயே,பேரருள் ஒருங்கேகொண்ட பிழையிலாக் கமலத்தாயே !

5.காலாம்பு(3)தாளி லலிதோரஸி கைடபா(4)ரே:
தா(4)ராத(4)ரே ஸ்புரதி யா தடி(3)த(3)ங்க(3)னேவ
மாதுஸ்ஸமஸ்த ஜக(3)தாம் மஹனீய மூர்தி:
ப(4)த்(3)ராணி மே தி(3)ச(H)து பா(4)ர்க(3)வ நந்த(3)னாயா:

கைடப அரக்கன் தன்னை கடித்தநின் கணவன் மார்புகார்முகில் அன்னந்தோன்றி கருணைநீர் பொழியுங் காலைமைதவழ் மார்பில் வீசும் மயக்குறும் மின்னல் ஒன்று!மயக்குவான் திருமால்; பின்னர் மகிழ்வநின் விழிதா னென்று!செய்தவப் பிருகு வம்சச் சேயெனப் பிறந்து எங்கள்திருவென வளர்ந்த நங்காய்! தினமும்யாம் வணங்கும் கண்ணாய்!கொய்தெடு விழியை என்மேல் கொண்டுவந் தருள்செய் வாயேகொற்றவர் பணிகள் செய்யும் கோலமார் கமலத் தாயே !

6.ப்ராப்தம் பத(3)ம் ப்ரதமத: கலுயத் ப்ரபா(4)வாத்
மாங்கல்யபா(4)ஜி மது(4)மாதினி மன்மதேன
மய்யாபதேத் ததி(3)ஹ மந்தரம் ஈக்ஷணார்த(4)ம்
மந்தா(3)லஸம் ச மகராலய கன்யகாயா:
போரினில் அரக்கர்கூட்டம் புறங்கண்ட நெடியோன் தன்னைபோரின்றிக் குருதி யின்றிப் புறங்காணத் துடித்து வந்தமாரனை ஊக்குவித்த வாளெது கமல நங்காய் ?மங்கையின் விழிகளன்றோ ! மாலவன் தன்னை வென்றதேரிய மாரன் உன்னைத் தேரெனக் கொண்டதாலேதிருமலை வேங்க டேசன் திறத்தினை வென்றான் அன்றோ!கூரிய விழியாய் உன்றன் குறுவிழி தன்னை என்பால்கொண்டுவந் தால்யான் உய்வேன் கொடுத்தருள் கமலத் தாயே !

7. விச்(H)வாமரேந்த்(3)ர பத(3)விப்(4)ரமதா(3)த(3)க்ஷ‍
மானந்த(3) ஹேதுரதி(4)கம் மது(4_வித்(3)விஷோ(அ)பி
ஈஷன்னிஷீத(3)து மய க்ஷணமீக்ஷணார்த(4)‍மிந்தீவரோத(3)ர ஸஹோத(3)ர மிந்தி(3)ராயா:

மந்திரம் உரைத்தாற் போதும் மலரடி தொழுதாற் போதும்
மாந்தருக்(கு) அருள்வேன் என்று மலர்மகள் நினைத்தால் போதும்இந்திர பதவி கூடும்; இகத்திலும் பரங்கொண் டாடும்;இணையறு செல்வம் கோடி இல்லத்தின் நடுவில் சேரும்சந்திரவதனி கண்கள் சாடையிற் பார்த்தாற் போதும்தாய்விழிப் பட்ட கல்லும் தரணியில் தங்கமாகும் !எந்தவோர் பதவி வேட்டேன்! எளியனுக்(ககு) அருள் செய்வாயே!இகத்தினில் செல்வம் தந்து இயக்குவாய் கமலத் தாயே!

8.இஷ்டா விசி(H)ஷ்ட மதயோ(அ)பி நரா யயா த்(3)ராக்

த்(3)ருஷ்டா ஸ்த்ரிவிஷ்டப பத(3)ம் ஸுலப(4)ம் ப(4)ஜந்தே

த்(3)ருஷ்டி: ப்ரஹ்ருஷ்ட கமலோத(3)ர தீ(3)ப்திரிஷ்டாம்

புஷ்டிம் க்ருபீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா:

எத்தனை பேர்க்குக் கிட்டும் இறையருள் ஆன்மசாந்தி ?இகமெனும் கடலில் வீழ்ந்து எவர்பிழைத் தார்கள் நீந்தி ?தத்துவப் படியே யாவும் தலைமுறை வழியே கிட்டும் !தவமெனும் முயற்சியாலெ பவவினை தணிந்து போகும் !அத்தனை முயற்சி என்ன அன்ணல்மா தேவி கண்ணில்அருள்மழை வந்தாற் போதும் அகம்புறம் முக்தி யாகும் !இத்தனை சொன்ன பின்னும் இன்னுமா தயக்கம் தாயே !இல்லத்தைச் செல்வ மாக்கி இன்னருள் புரிவாய் தாயே !

9.த(3)த்(3)யாத்(3) த(3)யானுபவனோ த்(3)ரவிணாம்பு(3) தா(4)ராம்

அஸ்மின்னகிஞ்சன விஹங்க(3) சி(H)சௌ(H) விஷண்ணே
து(3)ஷ்கர்ம த(4)ர்ம மபனீய சிராய தூ(3)ரம்

நாராயணப்ரணயினீ நயனாம்பு(3)வாஹ:

நீருண்ட மேகக்கண்கள் நிழலுண்ட கரிய கூந்தல்நேர்கொண்ட மாந்தர்வீட்டில் நிலைகொண்ட செல்வப் பந்தல்!சீர்கொண்ட அமுதச்செல்வி சில்லென்ற காற்றுப் பாய்ந்தால்சேர்கின்ற மேகத் தண்ணீர் சிதறுண்டு பாய்வதைப் போல்வேர்கொண்ட பாவமேனும் வினைகொண்ட பாவமேனும்வேய்கொண்ட தோளினாய் உன் விழிகண்டால் தீர்ந்து போகும்!தேர்கொண்டேன் புரவி இல்லை; செல்வமாம் புரவியாலேதிருவருள் செய்வாய் நீயே தேப்பெரும் கமலத்தாயே !
10. கீ(3)ர்தே(3)வதீதி க(3)ருட(3)த்(4)வஜ ஸுந்த(3)ரீதி

சா(H)கம்ப(4)ரீதி ச(H)சி(H)சே(H)கர வல்லபே(4)தி

ஸ்ருஷ்டி ஸ்திதி ப்ரளய கேலிஷு ஸம்ஸ்திதாயை

தஸ்யை நமஸ்த்ரிபு(4)வனைக கு(3)ரோஸ்தருண்யை

ஆக்கலும் அழித்தல் காத்தல் அருள்நிறை இறைவன் சக்தி!அன்னவன் தோளில் நீயே அனைத்துமாய் விளங்கும் சக்தி !ஆக்கலில் வாணியாவாய்; அளித்தலில் திருவாய் நிற்பாய்!அழிக்கின்ற வேளை வந்தால் அந்தமில் துர்க்கை யாவாய்!தீக்கொண்ட கரத்து நாதன் திருப்பரா சக்தி யாகதிரிபுரம் ஏழுலோகம் திருவருள் புரிந்து நிற்பாய்!வாக்குயர் கமலச் செல்வி வாடைநீ, தென்றல் நீயே !வளமென இரப்போர்க்கெல்லாம் வந்தருள் புரிகின்றாயே!

11.ச்(H)ருத்யை நமோ(அ)ஸ்து சு(H)ப(4)கர்ம பலப்ரஸூத்யை

ரத்யை நமோ(அ)ஸ்து ரமணீய கு(3)ணார்ணவாயை

ச(H)க்த்யை நமோ(அ)ஸ்து ச(H)தபத்ர நிகேதனாயை

புஷ்ட்யை நமோ(அ)ஸ்து புருஷோத்தம வல்லபா(4)யை

வேதத்தின் விளைவே போற்றி ! வினைப்பயன் விளைப்பாய் போற்றி !சீதத்தா மரையே போற்றி ! செம்மைசேர் அழகே போற்றி !கோதைப்பண் புடையாய் போற்றி ! குளிர்ந்ச்தமா மழையே போற்றி !ஓர்தத்துவத்தில் நிற்கும் உமையவள் வடிவே போற்றி !பாதத்தைக் கமலம் தாங்கப் பல்லுயிர் காப்பாய் போற்றி !நாதத்து நெடியோன் கொண்ட நங்கை நீ போற்றி ! போற்றி !பாதத்தில் சிரசை வைத்துப் பணிகின்றேன் போற்றி ! போற்றி !மாதத்தில் ஒருநாள் கூட மறந்திடாய் போற்றி ! போற்றி !

12.நமோ(அ)ஸ்து நாளிக நிபா(4)னனாயை

நமோ(அ)ஸ்து து(3)க்(3)தோ(4)த(3)தி(4) ஜன்மபூ(4)ம்யை

நமோ(அ)ஸ்து ஸோமாம்ருத ஸோத(3)ராயை

நமோ(அ)ஸ்து நாராயண வல்லபா(4)யை

அன்றலர் கமலம் போன்ற அழகிய வதனி போற்றி !அலைகடல் அமுதமாக அவதரித் தெழுந்தாய் போற்றி !குன்றிடா அமுதத் தோடு கூடவே பிறந்தாய் போற்றி !குளிர்ந்தமா மதியி னோடும் குடி வந்த உறவே போற்றி !sமன்றத்து வேங்கடேசன் மனங்கவர் மலரே போற்றி !sமாயவன் மார்பில் நின்று மயிலெனச் சிரிப்பாய் போற்றி !என்றைக்கும் நீங்காதாக இருக்கின்ற திருவே போற்றி !எளியவன் வணங்குகின்றேன் இன்னருள் போற்றி ! போற்றி !

13.நமோஸ்து ஹேமாம்பு(3)ஜ பீடிகாயை

நமோஸ்து பூ(4)மண்ட(3)ல நாயிகாயை

நமோஸ்து தே(3)வாதி(3) த(3)யாபராயை

நமோஸ்து சா(H)ர்ங்காயுத(4) வல்லபா(4)யை

தாமரை மலரில் நிற்கும் தளிரன்ன திருவே போற்றி !தாமரை வதனங் கொண்ட தங்கமா மணியே போற்றி !தாமரை கரத்தில் ஏந்தித் தவமென நிற்பாய் போற்றி !தாமரைக் கண்ணன் காக்கும் தரணியைக் காப்பாய் போற்றி !தாமரை போலே வந்த தவமுனி தேவர்க்கெல்லாம்தாமரைக் கைகள் காட்டி தயைசெயும் திருவே போற்றி !தாமரைக் கண்ணால் செல்வம் தந்தருள் புரிவாய் போற்றி !தாள், மறை, நானோ வார்த்தை; தர்மமே போற்றி ! போற்றி !

14.நமோஸ்து தே(3)வ்யை ப்(3)ருகு(3)நந்த(3)னாயை

நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை

நமோஸ்து லக்ஷ்ம்யை கமலாலயாயை

நமோஸ்து தா(3)மோத(4)ர வல்லபா(4)யை

பெண்ணெனப் பிறந்தா யேனும் பெரும்திறன் கொண்டாய் போற்றி!பிருகுவம் சத்தில் வந்த பீடுடை வதனம் போற்றி!தண்ணளி வேங்க டத்தான் தழுவிடும் கிளியே போற்றி!தத்துநீர்க் குளத்தில் ஆடும் தருணியே லக்ஷ்மீ போற்றி!சித்திரக் கொடியே போற்றி! செம்மணி நகையே போற்றி!ஸ்ரீதரன் திருப்பா தங்கள் சேவைசெய் குயிலே போற்றி!பத்தினிப் பெண்டிர் தம்மைப் பார்வையில் வைப்பாய் போற்றி!பக்தருக்(கு) அருள்வாய் போற்றி! பணிந்தனம் போற்றி! போற்றி!

15.நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை

நமோஸ்து பூ(4)த்யை பு(4)வனப்ரஸூத்யை

நமோஸ்து தே(3)வாதி(3)பி(4): அர்ச்சிதாயை

நமோஸ்து நந்தா(3)த்மஜ வல்லபா(4)யை

கண்களைப் பறிக்கும் காட்சி கவிந்தநின் வடிவம் போற்றி!கமலப்பூ வதனம் போற்றி! கமலமா விழிகள் போற்றி!மண்ணிலும் விண்ணு ளோர்க்கும் மங்கலம் நிறைப்பாய் போற்றி!மண்டல இயக்கத் திற்கே மந்திர(ம்) ஆனாய் போற்றி!விண்ணவர் வணங்கும் தேவி விந்தையின் மூலம் போற்றி!விரிமலர் கண்ணன் தேவன் விரும்பிடும் நகையே போற்றி!எண்ணிய படியே உன்னை ஏத்தினேன் போற்றி! போற்றி!இசைபட வாழ வைப்பாய் இலக்குமி போற்றி! போற்றி!

16. ஸம்பத்கராணி ஸகலேந்த்(3)ரிய நந்த(3)னானி

ஸாம்ராஜ்யதா(3) நிரதானி (விப(4)வானி) ஸரோருஹாணி

த்வத்(3)வந்த(3)னானி து(3)ரிதாஹரணோத்(3)யதானி

மாமேவ மாதரனிச(H)ம் கலயந்து மான்யே

மைவழிக் குவளக் கண்ணாய் வரையிலாத் திருவே போற்றி !வானவர் மண்ணோர்க் கெல்லாம் வணக்கமாய் நின்றாய் போற்றி !மெய்வழி செவிவாய் நாசி விழைந்திடும் இன்பம் போற்றி !விரித்தமேற் புலனுக் கெல்லாம் விளங்காத பொருளே போற்றி !கைநிறை செல்வம் யாவும் கடைக்கணால் அருள்வாய் போற்றி !காக்கையை அரச னாக்கும் கைமலர் உடையாய் போற்றி !செய்ததீ வினையை எல்லாம் தீர்க்கின்ற நெருப்பே போற்றி !சிறுமையைப் பெருமை யாக்கும் திருப்பதம் போற்றி ! போற்றி

17.யத் கடாக்ஷ ஸமுபாஸனாவிதி(4):

ஸேவகஸ்ய ஸகலார்த்த ஸம்பத(3):

ஸந்தனோதி வசனாங்க மானஸை:

த்வாம் முராரி ஹ்ருத(3)யேச்(H)வரீம் ப(4)ஜே!

மோகனன் துணையே போற்றி ! முழுநில வடிவே போற்றி !மூவுல கங்கள் தேடும் முதற்பெரும் பொருளே போற்றி !தேகத்தே ஒளியை வைத்த செம்மணிக் குன்றே போற்றி !தீராத ஆசைக் குள்ளே திருவென நிற்பாய் போற்றி !ஓர்கணம் தொழுதாற் கூட ஓடிவந் தளிப்பாய் போற்றி !ஊர்ந்தமா மேக வண்ணன் உவப்புறச் சிரிப்பாய் போற்றி !தாள்களில் பணிந்தே னம்மா தண்ணருள் தருவாய் போற்றி !தலைமுதல் பாதம் மட்டும் தாழ்கின்றேன் போற்றி ! போற்றி

18.ஸரஸிஜ நிலயே ஸரோஜ ஹஸ்தே

த(3)வளத(3)மாம்சு)(H)க க(3)ந்த(4)மால்ய சோ(H)பே(4)

ப(4)க(3)வதி ஹரிவல்லபே(4) மனோக்ஞே

த்ரிபு(4)வன பூ(4)திகரி ப்ரஸீத(3)மஹ்யம்

கண்பட்டால் மனது பாடும் கார்குழல் அலையே போற்றி!காதள வோடும் கண்ணால் காசினி அளந்தாய் போற்றி!வெண்பட்டால் அழகை மூடும் வியத்தகும் சிலையே போற்றி!வெண்மல்லி கைப்பூ மாலை விளையாடும் தோளீ போற்றி!பண்பட்டார் இல்லா தார்தம் பக்குவம் அறிவாய் போற்றி!பணிப்பவர் இதயத் துள்ளே பாசுரம் படிப்பாய் போற்றி!விண்முட்டும் ஞானம் பெற்ற வேதநா யகியே போற்றி!வேயிரு தோளின் சக்தி விரித்தருள் போற்றி! போற்றி!
19.தி(3)க்(3)க(3)ஸ்திபி(4): கனககும்ப(4) முகாவஸ்ருஷ்ட

ஸ்வர்வாஹினீ விமலசாரு ஜலாலுதாங்கீம்

ப்ராதர்நமாமி ஜக(3)தாம் ஜனனீமசே(ஹ்)ஷ

லோகாதி(3)நாத க்(3)ருஹிணீம் அம்ருதாப்(3)தி(4) புத்ரீம்

மண்டலத் திசைகள் தோறும் மதகரி குடங்கள் ஏந்திமங்கைக்கு நன்னீராட்ட கங்கைநீர் குடத்தில் மாந்திதண்டலக் கூந்தல் ஊற சர்வமங் களநீ ராட்டி தாமரைப் பூவின் மேலோர் தாமரைப் பூவைச் சூட்டிமண்டிய தூய்மைத் தாய்க்கு மற்றுமோர் தூமை நல்கிமறுவிலாப் பளிங்fகின் மேனி மாசறத் துலங்கச் செய்யும்அண்டமா நெடியோன் தேவீ, அலைகடல் அரசன் பெண்ணே!அரிதுயின் கொள்ளும் காலை அடியவன் வணங்குகின்றேன்!

20.கமலே கமலாக்ஷ வல்லபே(4)த்வம்

கருணாபூர தரங்கி(3)தைர பாங்கை:

அவலோகய மாம் அகிஞ்சனானாம்

ப்ரதமம் பாத்ரம் அக்ருத்ரிமம் த(3)யாயா:

பூவினில் உறையும் பூவே! பொன்னிடை உறையும் பொன்னே!பூஜைக்கே உரியோன் பூஜை புரிகின்ற காதற் செல்வீ!ஏவுமோர் உலகத் துள்ளே இன்மையோன் ஒருவ னேதான்இவனுனை இரந்தி நிற்க இதுவொரு நியாயம் போதும்!தாவுநீர்க் கடலை போல தண்ணருள் அலைகள் பொங்கும்சநிதிரப் பிறைப்பூங் கண்ணி சற்றுநீ திரும்பிப் பார்த்தால்மேவிய வறுமை தீர்ப்பேன்; மெல்லிடைப் பூங்கோதாய், நின்மின்னிடும் விழிகள் காண விழைந்தனேன் போற்றி! போற்றி!

21.ஸ்துவந்தி யே ஸ்துதிபி(4): அமீபி:(4) அன்வஹம்

த்ரயீமயீம் த்ரிபு(4)வனமாதரம் ரமாம்

கு(3)ணாதி(4)கா கு(3)ருதர பா(4)க்(3)ய பா(4)ஜின:

ப(4)வந்திதே பு(4)வி பு(3)த(4) பா(4)விதாஸ்ய:

முப்புவி ஈன்ற தாயே, மோகனச் சிரிப்பின் செல்வி!மூவிரண் டொன்றாய் வந்த பிரமத்தின் மொத்தமாகஅற்புதம் காட்டி நிற்கும் அழகிய சிற்பச் சோதிஆனந்தத் தெய்வமாதா அரும்பெறல் அன்னை பேரில்இப்பொழுது ரைத்த பாடல் எவரெங்குபா டினாலும்இப்புவி உளநாள் மட்டும் இன்பமும் அறிவும் செரும்;நற்பெரும் பேறும் கிட்டு! நன்னிலை வளரும்; என்றும்நாட்டுக்கே ஒருவ ராக நாளவர் உயர்வார் உண்மை!

கடலைமாவு சாம்பார் (சட்னி)

கடலை மாவு சட்னி (சாம்பார்)
தேவையானவைகடலைமாவு 2 டேபிள்ஸ்பூன்
ஆனியன் அரை
தக்காளி 1
சில்லி பவுடர் 1 டீஸ்பூன்
தேங்காய் 2 டீஸ்பூன்
கடுகு
உப்பு
செய்முறை:
மாவை தண்ணீர் விட்டு நன்கு கரைத்து வடிகட்டி கொள்ளவும்தேங்காயை அரைத்து வைக்கவும்சட்டியில் கடுகு,கறிவேப்பிள்ளை போட்டு தாளித்து ஆனியன் போட்டு நன்கு வதக்கவும்.அதில் தக்காளி போட்டு நன்கு வதக்கவும் தக்காளி வேகும் வரை அதில் கரைத்த மாவை ஊற்றி சில்லி பவுடர், உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி கலக்கவும் கிண்டி கொண்டே இருக்கவும் இல்லாவிடின் அடிப்பிடிக்கும் லாஸ்ட் தேங்காய் அரைத்தை போட்டு கொதிக்கவிட்டு பச்ச வாடை போனபின் இறக்கவும்சாம்பார் போல இருக்கவும் கட்டியாக இருந்தால் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றவும்


இட்லி தோசைக்கு நல்லா இருக்கும்

Monday, September 14, 2009

தேங்காய் சட்னி

தேவையானவை:
தேங்காய் 1 கப்
பொறிகடலை 2 டேபிள்ஸ்பூன்
பச்ச மிளகாய் 7
ஆனியன் சிறிது
செய்முறை:
எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைத்து கடுகு, ஊளுந்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிள்ளை தாளிக்கவும்
இட்லி,தோசைக்கு நல்லா இருக்கும்

பெல் பெப்பர் பொறியல்

தேவையானவை
பெல்பெப்பர் 1 பவுண்ட்
கறி பவுடர் 2 டீஸ்பூன்
தயிர் 3 டேபிள்ஸ்பூன்
உப்பு
தண்ணீர்
செய்முறை:
பெல்பெப்பரை சதுரங்களாக கட் பண்ணி தயிரில் பத்து நிமிடம் ஊறவிடவும்சட்டியில் கடுகு ஊளுந்தம்பருப்பு கறிவேப்பிள்ளை தாளித்து பெல்பெப்பரை போட்டு நன்கு வதக்கவும் சிறிது தண்ணீர் தெளித்து உப்பு போட்டு மூடி போட்டு வேகவிடவும் அதனுடன் கறி பவுடர் போட்டு நன்கு கிளறி இறக்கவும் .
குறிப்பு: பாதி பொட்டேடோ கூட சேர்க்கலாம் தயிர் சாதத்திற்கு நல்ல இருக்கும்

சோயா உருண்டை குழம்பு

தேவையானவை
சோயா 1கப்
பெல்பெப்பர் 1/2
னியன் -2
த‌க்காளி - 3
மிள‌காய் வ‌த்த‌ல் 4
தேங்காய் -3டீஸ்பூன்
எள் 1 டீஸ்பூன்
இஞ்சி சிறிது
த‌னியா தூள் 2 டீஸ்பூன்
சுக‌ர் ஒரு பின்ச்
இஞ்சி,பூடு பேஸ்ட் 1 டீஸ்பூன்
செய்முறை:
ஆனிய‌ன் த‌க்காளி இஞ்சி மிள‌காய் வ‌த்தல், சிறிது ஆயில் விட்டு வதக்கி ஆறவிட்டு அரைத்து வைக்கவும்தேங்காய், எள் தனித்த‌னியாக் வ‌றுத்து அரைத்து வைக்கவும்.பெல்பெப்பரை முதலில் வதக்கி கொள்க.கொதிக்கிற தண்ணீரீல் சோயா உருண்டை,இஞ்சிபூண்டு பேஸ்ட்,கரம் மசாலா போட்டு ஒரு கொதி வந்தது இறக்கி மூடி வைக்க ஆறிய பின் நன்கு பிழிந்து வைக்கவும்கடாயில் ஆயில் விட்டு க‌டுகு தாளித்து கரம் மசாலா சிறிது ஆனிய‌ன்,த‌க்காளி அரைத்தை போட்டு ந‌ன்கு வ‌தக்க‌வும் எண்ணெய் பிரியும் வ‌ரை வதக்கவும். சுகர், பெல்பெப்பர்,சோயா உருண்டையை போட்டு சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும் பின் தேங்காய் க‌ல‌வையை போட்டு சிறிது நேர‌ம் கொதித்த பின் இற‌க்கவும் மல்லி இலை போடவும்.
சாத‌த்திற்கு நல்லா இருக்கும்

இனிப்பு ஊளுந்தங் களி

ஊளுந்தம் பருப்பு -ஒரு கப்
அரிசி - ஒரு கப்
வெல்லம் -1கப்
தண்ணீர்
உப்பு -ஒரு பின்ச்
முந்திரிபருப்பு
ஏல‌ம்
செய்முறை:
பருப்பு அரிசி இரண்டையும் தனித்தனியாக வறுத்து கொள்க. ஆறியபின் மிக்ஸியில் ட்ரையாக பவுடர் பண்ணவும் சலித்து கொள்க. மாவு நைசாக இருக்கவும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவிட்டு ஒரு கப் மாவில் ஊற்றி உப்பு போட்டு நன்கு கிளறிவிடவும். தனியா வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு காய்ச்சவும்.எல்லாம் கரைந்த பின் வடி கட்டி நன்கு பாகு பதம் வந்ததும் அதனை மாவினுல் ஊற்றி ந‌ன்கு கலந்து விடவும் அதனை குக்கரில் வைத்து மூடி ஸ்டீம் வரும் போது வெயிட் போடவும் ஆனால் விசில் வரக்கூடாது 20 நிமிடம் வைத்து ஆஃப் பண்ணவும். குக்கரிலிருந்து எடுத்தபின் சிறிது நெய் காய்ச்சி அதில் முந்திரி பருப்பு,ஏலம் போட்டு களியில் கலக்கவும்.

ஊளுந்தங் களி


தேவையானவை :
அரிசி ஒரு கப்
ஊளுந்தம் பருப்பு 1 கப்
தண்ணீர்
உப்பு
செய்முறை:
அரிசி, பருப்பு இரண்டையும் தனித்தனியாக வறுத்து கொள்க. ஆறியபின் மிக்ஸியில் ட்ரையாக பவுடர் பண்ணவும் சலித்து கொள்க‌ மாவு நைசாக இருக்கவும்ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவிட்டு ஒரு கப் மாவில் ஊற்றி உப்பு போட்டு நன்கு கிளறிவிடவும். அதனை குக்கரில் வைத்து மூடி ஸ்டீம் வரும் போது வெயிட் போடவும் ஆனால் விசில் வரக்கூடாது 20 நிமிடம் வைத்து ஆஃப் பண்ணவும்

குறிப்பு :

இதற்கு மிளகாய் சட்னி நல்லா இருக்கும்

ரசம்

தேவையானவை

மிளகு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
தனியா 1 டீஸ்பூன்
துவரம்பருப்பு 1டேபிள்ஸ்பூன்
வத்தல் 6
பூண்டு 3
சுகர் பின்ச்
உப்பு
புளி சிறிது
தக்காளி 2
மல்லி இலை
மஞ்ச‌ள் தூள்
தாளிக்க‌:
க‌டுகு,சீர‌க‌ம்,பெருங்காய‌ம்,நெய், கறிவேப்பிள்ளை
செய்முறை
மிளகு ,சீரகம் பருப்பு,வ‌த்தல், தனியா எல்லாவற்றையும் பவுடர் பண்ணவும் ஒரு பாத்திரத்தில் ஒரு க‌ப் தணணீர் விட்டு அதில் கட் பண்ணிய‌ த‌க்காளியை போட்டு, புளியை போட்டு,மஞ்சள்தூள் போட்டு நன்கு கொதிக்க விடவும் தக்காளி வேகும் வரை அதில் அரை கப் தண்ணீர் விட்டு அதில் பவுட‌ர் ப‌ண்ணியதை போடவும். பூண்டை தட்டி போடவும் லேசாக‌ நுரைவரும் வரை வைத்து ம‌ல்லி இலை, சுகர் ஓரு பின்ச் போட்டு தாளிக்க வேண்டியதை தாளித்து ஒரு தட்டு போட்டு மூடி விடவும் 10 நிமிடம் கழித்து சாப்பிட‌வும்

அவியல்


தேவையானவை :
உருளைக்கிழங்கு - 1
பீன்ஸ் - 8
காரட் - 1
பட்டாணி
சவ்சவ்
முருங்கை - 1
க‌த்த‌ரிக்காய் 3
வ‌ழைகாய் 1

அவரைக்காய் 1
சேப்ப‌ங்கிழ‌ங்கு 2
கோவைக்காய் 8
பச்சைமிளகாய் -6
தேங்காய் - 1/2
கறிவேப்பிலை
தயிர் - 100 மில்லி
தேங்காய் எண்ணெய்
செய்முறை:
தேங்காய் , சீரகம், பச்சைமிளகாய்,சிறிது தயிர் சேர்த்து அரைத்து வைக்கவும். காய்களை ஒரு இஞ்ச் கட் பண்ணி கொள்ளவும். காய்கறிகளை உப்பு, போட்டு வேக விடவும். காய் வெந்ததும் அரைத்த போடவும்.தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கறிவேப்பிலையை சீரகம் போட்டு தாளிக்கவும் தயிரைக் கலந்து கொள்ளவும். அவியல் ரெடி .

Saturday, September 12, 2009

புலாவ்


தேவையானவை
பாஸ்மதி அரிசி 1 கப்
ஆனியன் ஒன்று
பச்ச மிளகாய் நான்கு + இரண்டு
இஞ்சி
சோம்பு 1/2டீஸ்பூன்
பட்டை 1
கிராம்பு 2
பீன்ஸ் 5
பட்டாணி சிறிது
காலிஃபிளவர்
செய்முறை:
அரிசியை 15 நிமிடம் ஊறவிடவும். இஞ்சி,பூடு,சோம்பு.தேங்காய்,நன்கு அரைத்து கொள்க காய்களை வேக வைத்து கொள்க‌சட்டியில் பட்டை கிராம்பு ஆனியன்,பச்சமிளகாய்2 போட்டு வதக்கி அரைத்ததை போட்டு நன்கு வதக்கவும் உப்பு போடவும் வேகவைத்த காய்களை போட்டு வதக்கவும்வேற சட்டியில் 1 கப் தண்ணிரை கொதிக்கவிட்டு இந்த கலவையை போட்டு கலக்கிவிட்டு கொதி வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து மூடிவிட்டு 15 நிமிடம் கழித்து ஆஃப் பண்ணவும். நல்லா உதிரியாக
இருக்கும் மல்லி தூவவும்

இத‌ற்கு எல்லா குருமாவும் ந‌ல்லா இருக்கும்

ரவா தோசை


தேவையானவை
ரவா - 1 கப்
அரிசிமாவு - 3/4 கப்
மைதா - 3 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 1
இஞ்சி -ஒரு துண்டு
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் -3
கறிவேப்பிலை
கொத்தமல்லி தழை
உப்பு
மிளகு -1/2 டீஸ்பூன்
செய்முறை:
ரவையை கலர் மாறாமல் வருத்துக் கொள்ளவும்.வறுத்த ரவையை மிக்ஸியில் மிளகு, பச்சை மிளகாய் சேர்த்து ஒரு சுற்று அரைத்துக்கொள்ளவும்.இதனுடன் மேலே கூறிய பொருட்கள் சேர்த்து 4 கப் நீர் சேர்த்து ஒருபத்து நிமிடங்கள் ஊறவைக்கவும்.தோசை சட்டியை நன்கு காயவைத்து மெல்லியதாக விடவும்.. பிறகு திருப்பி போட்டு வேக வைக்கவும். எண்ணெய் இரண்டு டீஸ்பூன் விடவும்
குறிப்பு: இந்த முறையில் தோசை கிரிஸ்பாக வரும்.தோசை வேகும் பொழுது அடுப்பை சிம்மில் வைத்து வேகவிடவும்

Friday, September 11, 2009

மிளகாய் சட்னி

தேவையானவை:
மிளகாய் வத்தல் 25
பூண்டு இரண்டு
புளி சிறிது
க‌றிவேப்பிள்ளை சிறிது
தாளிக்க‌:
ஆனியன் கடுகு உளுந்தம் பருப்பு
செய்முறை :வத்தல், பூண்டு,கறிவேப்பிள்ளை எண்ணெய் விட்டு வதக்கி புளியுடன் சேர்த்து அரைக்கவும்.கடுகு உளுந்தம்பருப்பு தாளித்து ஆனியன் போட்டு வதக்கி சட்னியுடன் சேர்க்கவும் நல்லா காரமாக இருக்கும்

பீட்ரூட் பொரியல்

தேவையானவை:
பீட்ரூட் இரண்டு
பாசி பயறு 4டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் ஒன்று
மிளகாய்வற்றல் ஒன்று
கறிவேப்பிலை சிறிது
கடுகு
மஞ்ச தூள் அரை ஸ்பூன்
உப்பு
அரைக்க‌: பச்சை மிளகாய்3, தேங்காய்த்துருவல்3டீஸ்பூன், அரை ஸ்பூன் சீரகம், கறிவேப்பிலை சிறிது, 3 பூண்டு
செய்முறை
பயிறை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.வெங்காயத்தையும் பீட்ரூட்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ள‌வும்.ஒரு சட்டியில் எண்ணெயை ஊற்றி கடுகைப் போட்டு தாளித்து மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அத்துடன் பீட்ரூட், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து முக்கால்வாசி வெந்ததும் பயிறு, அரைத்த‌ கலவை சேர்த்துக் நன்கு கிளறி எடுக்கவும்.

Thursday, September 10, 2009

கம்பு தோசை

தேவையானவை:
கம்பு 3கப்
அரிசி 1கப்
உளுந்து முக்கால் கப்

செய்முறை:
கம்பு அரிசி ஒன்றாக ஊறவைத்து அரைக்க உளுந்தை தனியா அரைக்க முதல் நாளே அரைத்து வைத்து பொங்க விட வேண்டும். அடுத்த நாள் தோசை ஊற்றவேண்டும்
இதற்கு தேங்காய், மிளகாய்வத்தல்,பொறிகடலை சேர்த்து அரைத்த சட்னி நல்லா இருக்கும்
மிளகாய் சட்னி நல்லா இருக்கும்

Wednesday, September 9, 2009

ப்ரவுன்ரைஸ் அடை

தேவையானவை
ப்ரவுன் ரைஸ் அரை கப்
துவரம் பருப்பு அரை கப்
பாசிப் பருப்பு கால் கப்
சோயா அரை கப்
ஜவ்வரிசி கால் கப்
பாசி பயறு கால் கப்
மிளகாய் வத்தல் 8
உப்பு
ஆனியன் 1
பச்ச மிளகாய் 2
கறிவேப்பிள்ளை
மல்லி இழை

செய்முறை:
பருப்பு,அரிசி,வத்தல் எல்லாவற்றையும் ஊறவைத்து கிரைண்டரில் கரகரப்பாக அரைத்து உப்பு ஆனியன் கட் பண்ணி போட்டு கறிவேப்பிள்ளை மல்லி போட்டு தவாவில் மாவை எடுத்து ஊற்றி திக்காக இல்லாமல் தின்னாக ஊற்றவும் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு முறுகளாக எடுக்கவும

தவளை வடை

தேவையானவை:

துவரம் பருப்பு 1டேபிள்ஸ்பூன்
கடலைபருப்பு 1டேபிள்ஸ்பூன்
பாசிப்பருப்பு 1டேபிள்ஸ்பூன்
மசூர் தால் 1டேபிள்ஸ்பூன்
ஜவ்வரிசி 1டேபிள்ஸ்பூன்
மிளகாய் வத்தல் நான்கு
ஆனியன் 1
கறிவேப்பிள்ளை
உப்பு
பச்சமிளகாய் 2(விருப்பபட்டால்)

செய்முறை:
பருப்புகள் ஜவ்வரிசி மேலும் மிளகாய் வத்தல் அனைத்து ஊறவிட்டு ககரப்பாக அரைத்து கொள்க. ஆனியன் கட் பண்ணி போட்டு கறிவேப்பிள்ளை பச்சமிளகாய் கட் பண்ணிபோட்டு கட்டியாக இருக்கும்.சட்டியில் எண்ணெய் காய வைத்து இரு குழி கரண்டியில் மாவை எடுத்து ஊற்றி வெந்ததும் எடுக்கவும்.இது நல்லா கிரிஸ்பியாக இருக்கும்

குறிப்பு:ஒரு மணி நேரம் மட்டும் ஊறினால் போதும்

தக்காளி சட்னி, தேங்காய்சட்னி,சாம்பார் நல்லா இருக்கும்


ப்ராக்கலி சோயா

தேவையானவை:
ப்ராக்கலி 1கப்
ஆனியன் அரை
சோயா க்ரானுவல்ஸ் 4 டேபிள்ஸ்பூன்
சில்லி பவுடர் அரை டீஸ்பூன்
உப்பு
செய்முறை:
தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சோயா க்ரானுவல்ஸை போட்டு மூடி இறக்கி வைக்கவும். சிறிது ஆறியபின் 2 தடவை தண்ணீர் விட்டு அலசி வடிகட்டி வைக்கவும் ந‌ன்கு பிழிந்து வைக்க‌வும்
சட்டியில் தாளித்து ஆனியன் போட்டு நன்கு வதக்கி கட் பண்ணிய ப்ராக்கலியை போட்டு உப்பு போட்டு சிறிது தண்ணீர் தெளித்து மூடி 5 நிமிடம் வேகவிட்டு சோயாவை, சில்லி பவுடர் போட்டு 4 நிமிடம் கிளறி எடுக்கவும்

குறிப்பு:
ப்ராக்கலி நன்கு வேககூடாது அரை பதம் தான் வேகனும் அதில் உள்ள சத்து வேஸ்ட் ஆகி விடும்

இதே போல் பீன்ஸ்,பெல்பெப்பரிலும் செய்யலாம்


Tuesday, September 8, 2009

மோதகம்


தேவையானவை:
பச்சஅரிசி மாவு -ஒரு கப்
வெல்லம் -அரை கப்
ஏலம் அரை டீஸ்பூன்
தேங்காய் -ஒரு டேபிள்ஸ்பூன்(பொடியாக நறுக்கியது)
வெள்ளை எள் -ஒரு
டீஸ்பூன் தண்ணீர் -அரை கப்
செய்முறை:
தண்ணீர் சுட வைக்கவும் கொதிக்ககூடாது அதில் மாவை போட்டு நன்கு கிளறவும்.வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கரைந்ததும் வடிகட்டி நன்கு காய்ச்சவும். ஒரு சின்ன கப்பில் தண்ணீர் எடுத்து அதில் பாகை சிறிது ஊற்றி பார்க்கவும் அந்த பாகு உருண்டை பிடிக்கிற பதத்திற்கு வந்தவுடன் மாவுடன் கலக்கவும்.சட்டியில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும் தேங்காய், எள் போட்டு நன்கு வதக்கி மாவுடன் கலக்கவும். ஆறியபின் சிறு சிறு உருண்டையா உருட்டி ஆவியில் வேகவிடவும்

Monday, September 7, 2009

ஸ்ட்ராபெரி ஜூஸ்


தேவையானவை:
ஸ்ட்ராபெரி -1கப்

தேன் -இரண்டு டிஸ்பூன்

சுகர் -2 டீஸ்பூன்

பால் - சிறிது(விருப்பபட்டால்)

ஐஸ்க்யூப் -ஐந்து

செய்முறை:

எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு அடித்து குடிக்கவும்

தக்காளி சட்னி


தேவையானவை:
தக்காளி -ஒன்று
மிளகாய் வத்தல் -ஐந்து
ஆனியன் - ஒன்று
உப்பு
மல்லி இல்லை சிறிது
செய்முறை:
எல்லாவற்றையும் எண்ணெய் விட்டு வதக்கி ஆறிய பின் நன்கு அரைத்து தாளித்து கொள்க

குறிப்பு:

இட்லி, தோசை, அடைக்கு நல்லா இருக்கும்