Friday, November 6, 2009
சோயா வடை
தேவையான பொருட்கள்
பிரெட் தேவைக்கேற்ப
சோயா 100 கிராம்
உருளைக்கிழங்கு 2
மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் 1/2 டீஸ்பூன்
வெங்காயம் 1
பச்ச மிளகாய் 2
இஞ்சி சிறிது துருவியது
கொத்தமல்லி 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் ஒரு பின்ச்
லெமன் ஜீஸ் 1/2டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
செய்முறை:
சோயாவை 8 மணி நேரம் ஊறவைத்து, மசிக்கும் அளவு வேக வைத்து, ஒன்றிரண்டாக மசித்து வைக்கவும்.கிழங்கை வேகவைத்து கொள்ளவும் சட்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சமிளகாய் கட் பண்ணி போட்டு வதக்கவும் உருளைக்கிழங்கை உதிர்த்து போட்டு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, உப்பு, மல்லி இலை சேர்த்து நன்கு வதக்கி வைக்கவும்.சிறிதளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.பிரட் ஸ்லைசை ஓரத்தை கட் பண்ணி விட்டு, தண்ணீரில் நனைத்தவுடன் உடனே பிழிந்து நடுவில் சோயா உருண்டையை வைத்து மூடி, உருட்டி, எண்ணெயில் பொரிக்கவும்.
கொத்தமல்லி சட்னி, சாஸுடன் நல்லா இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான மாலைநேரத்துக்கான நொறுக்குத்தீனி!!
ReplyDeleteதலைப்பு இல்லையே?
i'm totally forgot it:( Thanks for your comment
ReplyDeleteவித்தியாசமா இருக்கு. முயச்சி பண்ணுவேம் நன்றி.
ReplyDeletetry panni paarungka nallaa irukum!! thanks
ReplyDeletelooks yummy
ReplyDeleteரொம்ப நன்றாக இருக்கு பார்த்தவுடனே சாப்பிட தூண்டுகிறது, அவசியம் செய்து பார்க்கிறேன்.
ReplyDeleteThanks Shanthi,
ReplyDeleteThanks viji creations!!!
ReplyDelete