Friday, December 4, 2009

அதிரசம்


தேவையான பொருட்கள்:

ப.அரிசி ‍ 2 கப்

வெல்லம் ‍ 1 கப்

ஏலக்காய் ‍ 1 டீஸ்பூன்

நெய் - மூன்று டேபிள் ஸ்பூன்

ஆயில்

செய்முறை:

அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து நீரை நன்கு வடித்து விட்டு சிறிது நேரம் நிழலில் காய விடவும் பாதி ஈரமாக இருக்கும் போதே மிக்ஸியில் போட்டு திரித்து சல்லடையில் சலித்து மாவு தாயாரிக்கவும். மாவு ஈரமாக இருக்கும் போதே அடுப்பில் சட்டியை வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி வெல்லத்தை சேர்க்கவும் வடி கட்டி கொதிக்க அடுப்பை சிம்மில் வைத்து பாகு வைக்கவும் கப்பில் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் சிறிது பாகை ஊற்றி அது பிடிக்கிற பதம் வந்ததும் அரிசி மாவை சிறிது சிறிதாகப் போட்டு கிண்ட வேண்டும். பிறகு ஏலக்காய் பொடி சேர்க்கவும். மாவு இருக்கமாக இருக்கக் கூடாது. சிறிது தளர இருக்க வேண்டும். மாவை உருண்டைய்யாக உருட்டினால் வெடிப்பு இல்லாமல் இருக்க வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் நெய் தடவி, மாவை ஒரே உருண்டையாக உருட்டி சுற்றி நெய் தடவி அதில் போட்டு மூடி வைக்கவும். மறுநாள் மிதமான தீயில் எண்ணையை சூடாக்கவும். சிறிய அளவு மாவை உருண்டையாக உருட்டி பிறகு லேசாக தட்டி எண்ணையில் போட்டு பொறித்து பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.

9 comments:

  1. Oh that brings back all nostalgic memories...my friends mommy used to make this for festivals..:)sounds gr8.

    ReplyDelete
  2. adhirassam naan try pannadhey kidayaadhu; never dared to do :) my ammini (paati) used to do them for xmas, romba pidikkum!!

    ReplyDelete
  3. I love this,but i never tried,will try ur recipe

    ReplyDelete
  4. தேங்ஸ் சங்கீதா!!!

    தேங்ஸ் அகல்ஸ் பார்க்க தான் லாங் ப்ரொசஸ் ஆனா வெரி ஈஸி!!!

    தேங்ஸ் மை கிட்சன் ட்ரை பண்ணுங்க ஈஸியா தான் இருக்கும்!!

    ReplyDelete
  5. இந்த மாவை நெய் தடவி மறுநாள் எடுத்து சுடனும். வெளியில் வைக்கனுமா? அல்லது பிரிட்ஜிலா?

    போனவருடம் எப்படியும் குறீப்பு போட்டு விடலாம் என்று அதிரசம் செய்தேன் ஆனால் மாவை பிரிட்ஜில் வைத்தேன். மறுநாள் சுடும் போது டேஸ்ட் சூப்பர், நாலு தான் நல்ல வந்தது மீதி எல்லாம் தூளாகா நொருங்கி எண்ணையில் கலந்து வடித்து எடுத்தேன்,

    இதுக்கு என்ன செய்யனும்.கொஞ்ச‌ம் சொல்லுங்க‌ளே

    ReplyDelete
  6. தேங்ஸ் ஜலீலா அக்கா.. அக்கா பிரிட்ஜில் வைத்தால் இப்படித்தான் ஆகும் வெளியில் தான் வைக்கனும்

    ReplyDelete
  7. என் பேவரிட் இது.பார்க்கும்போதே சாப்பிடனும் போல் இருக்கு..

    ReplyDelete
  8. அடுத்த முறை செய்யும் போது வெளியில் வைத்து செய்து பார்க்கிறேன்

    ReplyDelete

Reply Me