Friday, December 4, 2009

பட்டர் பனீர் மசாலா


பனீர் 1 கப்
இஞ்சி,பூண்டு பேஸ்ட் 2 டீஸ்பூன்
உப்பு
பட்டர் 3டேபிள் ஸ்பூன்
பட்டை 3
லவங்கம் 2
ஏலக்காய் 2
வெங்காயம் 1
மஞ்சள் தூள் ‍ சிறிது
மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
தனியாதூள் 2டீஸ்பூன்
கர‌ம் மசாலா 1டீஸ்பூன்
தக்காளி 3
கசகசா 1 டேபிள் ஸ்பூன்
முந்திரிபருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்
சுக‌ர் பின்ச்
கொத்தமல்லி தலை
செய்முறை
பனீரை எண்ணெயில் பொரித்து எடுக்கவும் (பொறிக்காமலும் போடலாம்)தக்காளியை சுடு த‌ண்ணீரில் போட்டு ஐந்து நிமிட‌ம் மூடி வைக்கவும் ஆனியனை மிக்ஸியில் அரைத்து வைக்க‌வும்,த‌க்காளி த‌னியா அரைக்க‌வும் முந்திரிப‌ருப்பு க‌ச‌க‌சா த‌னியா அரைத்து வைக்க‌வும்.ச‌ட்டியில் ப‌ட்ட‌ர் போட்டு ப‌ட்டை, கிராம்பு,ஏல‌ம் போட்டு தாளிக்க‌வும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு ந‌ல்லா வ‌த‌க்க‌வும் அரைத்த ஆனிய‌னை சேர்த்து ந‌ன்கு க‌ல‌க்க‌வும்,பின் அரைத்த‌ த‌க்காளி அரைத்த‌தை போட்டு சில்லிப‌வுட‌ர்,த‌னியாப‌வுட‌ர்,க‌ர‌ம் ம‌சாலா,சுக‌ர் போட்டு ந‌ன்கு வ‌த‌க்க‌வும் அதில் அரை ட‌ம்ள‌ர் த‌ண்ணீர் ஊற்றி க‌ல‌க்கி கொதிக்க‌விட‌வும் க‌டைசியில் க‌ச‌க‌சா முந்திரி அரைத்த‌ க‌ல‌வையை போட்டு ந‌ன்கு கிள‌றி,பொறித்த பனீரை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிட‌ம் கொதிக்க‌விட‌வும் ம‌ல்லி இலை தூவ‌வும்கொஞ்சம் ரிச்சாக வேண்டுமென்றால் க்ரீம் 2 டேபிள் ஸ்பூன் சேர்க்கலாம்
ச‌ப்பாத்தி,புலாவ், புரோட்டா,பிரியானிக்கு ந‌ல்லா இருக்கும்

8 comments:

  1. WOW!!My all time fav..looks delicious!!

    ReplyDelete
  2. நானும் இம்முறையில்தான் செய்வேன் சுஸ்ரீ.மேலே க்ரீம் சேர்த்து பார்க்க அழகாக உள்ளது.அநேகருக்கு பிடித்தமான டிஷ் இது.

    ReplyDelete
  3. I will do in similar way,looks delicious

    ReplyDelete
  4. Sangeetha,Shadiqah,mykitchen Thankyou so much all

    ReplyDelete
  5. ஏம்மா இந்த கஞ்ச தணம் இடம் விட்டு நல்ல தாராளமாக எழுதுங்கள் குறிப்பை, எல்லாம் ஒன்றாக போய் ஒட்டி கொள்கிறது

    ReplyDelete
  6. அக்கா நான் எப்படி எழுதினாலும் இப்படியாகிறது என்ன பண்ணலாம்னு சொல்லுங்க!!

    ReplyDelete
  7. வாவ் என்னுடைய பேவரிட்....

    ReplyDelete

Reply Me