Friday, October 16, 2009

ஆமவடை


செய்முறை :

கடலைப்பருப்பு இரண்டு க‌ப்
ஆனியன் ‍ இரண்டு
மிளகாய் வத்தல் ஐந்து
இஞ்சி சிறிது
சோம்பு சிறிது
கறிவேப்பிலை

மல்லி
உப்பு

செய்முறை
கடலைப்பருப்பை குறைந்தது இரண்டு மணிநேரம் அல்லது இரவு முழுவதும் ஊறவைத்து ஒரு கைப்பிடியளவு தனியாக எடுத்து வைத்து விடவும்.வெங்காயம் மல்லி பொடியாக நறுக்கி வைக்கவும்.பிறகு பருப்பு ஊறிய தண்ணீரை வடித்து விட்டு, அதனுடன் காய்ந்தமிளகாய், உப்பு,இஞ்சி,ஒரு தேக்கரண்டி சோம்பு,ஆகியவற்றைச் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துககொள்ளவும்.அரைத்தபருப்புடன்,வெங்காயம்,மல்லி,கறிவேப்பிலை, மீதமுள்ள சோம்பு, தனியாக எடுத்து வைத்துள்ள பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.பிறகு எண்ணெய் சட்டியில் எண்ணெயைக் காய வைத்து அனலை குறைத்து வைத்து, பருப்பு கலவையிலிருந்து ஒரு எலுமிச்சையளவு உருண்டையை உள்ளங்கையில் வைத்து தட்டி எண்ணெயில் போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.இதனுடன் தேங்காய் சட்னியை வைத்து சூடாக பரிமாறவும்.

6 comments:

  1. இதை மசால் வடைன்னு சொல்லுவோம்.எனக்கு ரொம்ப பிடித்த வடை இது.சூப்பராயிருக்கு ஸ்ரீ!!

    ReplyDelete
  2. wow.. yummy vadais.. looks great.. first time here.. u have a wonderful recipes..

    ReplyDelete
  3. I miss those vadais so much, we call it masaal vadai; love to eat them piping hot :)my papa also loves it so much !

    ReplyDelete

Reply Me