Tuesday, October 20, 2009

பாதாம் பர்ஃபி



பாதாம் ஒரு கப்
பால் அரை கப்
நெய் 1/4 கப்
சீனி 1 கப்
குங்குமப்பூ ஒரு பின்ச்
செய்முறை:
வெந்நீரில் பாதாம் பருப்புகளை போட்டு ஊற வைக்கவும். நன்கு ஊறியதும் தோல் உரித்து கொள்ளவும். .பருப்பை மிக்ஸியில் போட்டு பால் சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
ஒரு அடிகணமான‌ பாத்திரத்தில் சீனியை போட்டு சிறிது தண்ணீர் விட்டு ஒரு கம்பி பதம் வந்ததும் அரைத்த விழுதை ஊற்றி கைவிடாமல் கிளறவும் பாதாம் கலவை சற்று கெட்டியான பதம் வந்ததும் குங்குமபூவை சிறிது பாலில் கலந்து கலக்கவும், நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கிளறி விடவும். நெய் எல்லாவற்றையும் ஓரே நேரத்தில் சேர்த்து விட கூடாது பாதாம் கலவை நன்கு கெட்டியாகி பர்ஃபி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு கீழே இறக்கி வைக்கவும். சிறிது ஆறியதும் கட் பண்ணவும்

4 comments:

  1. ரொம்ப சூப்பரா பார்க்கவே சுஸ்ரீ, பாதம் பர்பி மேல் முந்திரிக்கு பதில் பாதம் வைத்து இருந்தால் பார்க்க்க இன்னும் நல்ல இருக்கும்

    ReplyDelete
  2. ரொம்ப அருமையான குறிப்பு ஸ்ரீ!!

    ReplyDelete
  3. Thanks Jaleela akka Badaam kaali aayiduththu

    ReplyDelete

Reply Me