Tuesday, October 20, 2009

பாவ் பாஜி


செய்முறை:
உருளைக்கிழங்கு 2
கேரட் 2
பீன்ஸ் 1 க‌ப்
பட்டாணி சிறிது
காலிஃளவர் சிறிது
குட‌மிள‌காய் பாதி
வெங்காயம் ஒன்று
தக்காளி இரண்டு
பச்சைமிளகாய் நான்கு
இஞ்சி பூண்டு 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்
தனியாத்தூள் 1 டீஸ்பூன்
மஞ்சத்தூள் அரை டீஸ்பூன்
சீரகத்தூள் அரை டீஸ்பூன்
பாவ் பாஜி ம‌சாலா 1 டீஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் ஒரு டீஸ்பூன்
வெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
உப்பு
பன் - நான்கு
செய்முறை:
உருளைகிழங்கின் தோலை சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.பிறகு அதனுடன் காலிஃளவரை தவிர்த்து மற்ற எல்லாக் காய்களையும் சேர்த்து கொதிக்கும் நீரில் போட்டு நன்கு வேகவைத்து நீரைவடித்து விட்டு ஒன்ரும் பாதியுமாக மசித்து வைக்கவும்.வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.ஒரு வாயகன்ற சட்டியில் வெண்ணெய், எண்ணெயை கலந்து ஊற்றி காயவைத்து வெங்காயம், பச்சைமிளகாயைப் போட்டு நன்கு வதக்கவும்.பிறகு இஞ்சி பூண்டைப் போட்டு வதக்கி தக்காளியை சேர்த்து நன்கு மைய்ய வதக்கவும்.பிறகு காலிஃளவரைப்போட்டு நன்கு வதக்கி அது வெந்தவுடன் எல்லாத்தூளையும் போட்டு உப்பைச் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.பிறகு மசித்த காய்களைப் போட்டு நன்கு கிளறி கால்க் கோப்பை நீரை ஊற்றி அனலைக் குறைத்து வைத்து வேகவிடவும்.மசாலா நன்கு கலந்து கெட்டியாக ஆனதும், எலுமிச்சை தெளித்து கொத்தமல்லியை தூவி கிளறி விட்டு இறக்கி விடவும்.பிறகு பாவ்/பன்னை இரண்டாக நறுக்கி சூடான தோசைகல்லில் பொட்டு சூடாக்கி வெண்ணெயைத் தடவி தயாரித்த மசாலாவை அதன் நடுவில் வைத்து,ஆனியனை கட் பண்ணி போட்டு சூடாக பரிமாறவும்.

2 comments:

Reply Me