
தேவையானவை:
மைதா- இரண்டு கப்
கடலைப்பருப்பு 1 கப்
வெல்லம் ஒரு கப்
தேங்காய்துறுவல் அரைகப்
ஏலப்பொடி சிறிது
மஞ்சத்தூள் சிறிது
உப்பு 1 பின்ச்
நெய்
செய்முறை:
மைதாவில் உப்பு, மஞ்சள் போட்டு இரண்டு டீஸ்பூன் எண்ணெயைச் சேர்த்து கலக்கவும். பின்பு தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து சற்று தளர பிசைந்துக் கொள்ளவும்.கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து வேகவைத்து நீரை வடித்து விட்டு ஒன்றும்பாதியுமாக அரைத்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப்போட்டு உருக்கவும். அதில் அரைத்த கடலைபருப்பு, ஏலப்பொடி, மற்றும் தேங்காய் துறுவல் சேர்த்து நன்கு கலக்கவும்.பூரணம் நன்கு கெட்டியானவுடன் இறக்கி வைத்து ஆறவைக்கவும்.பிறகு மைதாமாவிலிருந்து சிறிய எலுமிச்சையளவு உருண்டையை எடுத்து தேய்க்கவும்.பிறகு பூரணத்தை சிறிது எடுத்து அதன் நடுவில் வைத்து மூடி மீண்டும் தேய்க்கவும். பிறகு தோசைகல்லை காயவைத்து தயாரித்த போளிகளை ஒவ்வொன்றாக போட்டு சுற்றிலும் நெய்யை ஊற்றி இரண்டு பக்கமும் சிவக்க வேகவைத்து எடுக்கவும்
மிக அருமையான போளி எனக்கு ரொம்ப பிடிக்கும்.
ReplyDeleteஎன் பிலாக் பக்கம் வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி சுஸ்ரீ
போளி அழகா செய்திருக்கிங்க.எப்படியும் முயற்சி செய்யனும் ஏன்னா எனக்கு இந்த போளி மட்டும் சரியா வராதுப்பா.
ReplyDeleteThanks Menaga!
ReplyDeleteThanks Jaleela akka
ReplyDeleteமேற்குமாம்பலம் வெங்கடேஷ்வரா போளி ஸ்டாலில் கிடைக்கும் போலி போல் பளபளக்குது உங்கள் போளி.அழகான படங்கள்
ReplyDeleteThanks shadiqa akka!!
ReplyDelete