Wednesday, October 21, 2009
கத்தரிக்காய் மசாலா
கத்திரிக்காய் 10
வெங்காயம் - 1
தக்காளி - 1
புளி - சிறிது
உப்பு
வறுத்து அரைக்க:
தேங்காய் - 1 டேபிள்ஸ்பூன்
எள்ளு - 1 டீஸ்பூன்
நிலக்கடலை - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4
தனியா - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - சிறிது
வெந்தயம் - சிறிது
கடுகு சிறிது
.தாளிக்க :
கடுகு
கருவேப்பிலை
வெங்காயம் - 1
இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்.
கரம் மசாலா சிறிது
செய்முறை:
கத்தரிக்காயை நான்காக கட் பண்ணவும்.வறுக்க வேண்டியவைகளை மசாலா பொருட்கள்,தேங்காய் துருவல் வறுத்து,அரைக்கும் போது பாதி வெங்காயம் ,தக்காளி யை அதனுடன் மிக்ஸியில் சேர்த்து சுற்றி எடுக்கவும்.சட்டியில் எண்ணை விட்டு அதில் கடுகு கறிவேப்பிலை,வெங்காயம்,இஞ்சி பூண்டு பேஸ்ட் ,கரம் மசாலா போட்டு தாளித்து ,கத்திரிக்காயை போட்டு எண்ணையில் பத்து நிமிடம் பிரட்டி பிரட்டி வேக விடவும்.அரைத்த மசாலா பொருட்களை சிறிது தண்ணீர்,உப்பு சேர்த்து கத்திரிக்காயுடன் சேர்த்து வேக விடவும்.வெந்த பின்பு புளிக்கரைசலை கெட்டியாக விடவும்.பச்ச வாசனை போனபின் ,சிறிது வெல்லம் சேர்த்து சிம்மில் வைத்து எண்ணை தெளிந்து இறக்கவும்
குறிப்பு
பிரியாணி,சப்பாத்தி,சாதம், நான் நல்லா இருக்கும்
Subscribe to:
Post Comments (Atom)
என்னுடைய பேவரிட் இது.அருமையான குறிப்பு!!
ReplyDelete